ஊதியத்துடன் மெட்டர்னிட்டி லீவ் எடுக்கும் தாய்மார்கள் நீண்ட கால மன, உடல் ஆரோக்கியத்தை பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல்!

ஊதியத்துடன் மெட்டர்னிட்டி லீவ் எடுக்கும் தாய்மார்கள் நீண்ட கால மன, உடல் ஆரோக்கியத்தை பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல்!

மாதிரி படம்

ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பு, தாய்மார்களிடையே வரும் மகப்பேற்றுக்கு பிறகான தாய்வழி மனச்சோர்வு விகிதங்கள் கணிசமாக குறைந்திருந்ததையும் குழு கண்டறிந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலைக்கு செல்லும் திருமணமான பெண்களுக்கு அவர்களின் மகப்பேறு காலத்தில் நிறுவனங்கள் மெட்டர்னிட்டி லீவ் வழங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இந்த காலகட்டத்தில் சில நிறுவனங்கள் அவர்களுக்கு பாதி ஊதியம் அல்லது முழு ஊதியத்தையும் மாத சம்பளமாக வழங்குகிறது. ஆனால் சில நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பு காலத்தில் சம்பளத்தை வழங்குவதில்லை.

அந்த வகையில் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு பெறும் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மனம் மற்றும் உடல் ஆரோக்கிய நன்மைகளைக் பெறுகிறார்கள் எனவும், இதன் காரணமாக மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாகவும் ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் ரிவியூ ஆஃப் சைக்கியாட்ரி (Harvard Review of Psychiatry) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு பெரும் தாய்மார்களிடையே தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும் காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் கால அளவு ஆகிய இரண்டின் சாத்தியக்கூறுகளும் அதிகரித்தது. அதன்படி அவர்களால் தங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க முடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா மங்குரியன் கூறியதாவது, "ஆய்வில் கிடைக்கக்கூடிய தகவல்கள் இப்போது தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஊதிய மகப்பேறு விடுப்பு நல்லது என்பதைக் காட்டுகிறது. எனவே, இது வணிகத்திற்கு மட்டுமல்ல, உழைக்கும் குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

இதற்காக, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பின் விளைவுகள் குறித்த சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். சுமார் 26 சோதனை அல்லது அரை-சோதனை ஆய்வுகளில் கவனம் செலுத்தியன் மூலம், பல பகுதிகளில் ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பின் பொது சுகாதார நன்மைகளை பகுப்பாய்வு எடுத்துக்காட்டியுள்ளது.

Also read... கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் ஏற்படும் மிகவும் பொதுவான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

மேலும் ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பு, தாய்மார்களிடையே வரும் மகப்பேற்றுக்கு பிறகான தாய்வழி மனச்சோர்வு விகிதங்கள் கணிசமாக குறைந்திருந்ததையும் குழு கண்டறிந்தது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் பொதுவான கோளாறு ஆகும். இது தவிர குறைக்கப்பட்ட உளவியல் மன உளைச்சல், மேம்பட்ட மனநிலை போன்ற பிற நன்மைகளும் அவர்களுக்கு கிடைக்கிறது.

எனவே, பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வின் அபாயத்தைக் குறைப்பது மற்றும் தாய்-சேய் பிணைப்பில் அதன் உள்ளார்ந்த பாதகமான விளைவுகள் உட்பட மகப்பேறு விடுப்பு என்பது குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன்படி மகப்பேறு விடுப்பின் காலம் தாய்-குழந்தை தொடர்புகளின் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் இணைப்பு, எம்பதி மற்றும் பிற்கால கல்வி செயல்திறன் ஆகியவற்றின் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: