Home /News /lifestyle /

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்..? உடல் எடை அடிப்படையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்..?

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்..? உடல் எடை அடிப்படையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்..?

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீர்

பல சுகாதார நிபுணர்கள் ஒவ்வொரு நாளும் எட்டு முதல் பத்து கிளாஸ் அல்லது 3 லிட்டர் - 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை பரிந்துரைக்கும் அதே வேளையில் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

நம் உடலின் அனைத்து முக்கிய சிஸ்டம்களும் சரியாக வேலை செய்ய தண்ணீர் அத்தியாவசியம். தண்ணீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை ஒழுங்குபடுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது, அனைத்து முக்கிய உடல் செயல்பாடுகளும் தடையின்றி நடைபெற உதவுகிறது, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது.

எனவே தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. பல சுகாதார நிபுணர்கள் ஒவ்வொரு நாளும் எட்டு முதல் பத்து கிளாஸ் அல்லது 3 லிட்டர் - 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை பரிந்துரைக்கும் அதே வேளையில் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆம், எல்லாவற்றையும் போலவே அதிகப்படியான தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல.

அதே நேரம் அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான மற்றும் நன்கு ஊட்டமுள்ள பெரியவர்களுக்கு அரிதாகவே ஒரு பிரச்சனையாக இருப்பதாக மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் அசுதோஷ் சுக்லா கூறி உள்ளார். ஆனால் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிகப்படியான ஹைட்ரேஷன் ஒரு சவாலாக இருக்கலாம், ஏனெனில் அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற முடியாது. இதன் விளைவாக, ரத்தத்தில் உள்ள சோடியம் உள்ளடக்கம் நீர்த்து போகும், இது உயிருக்கு ஆபத்தான நிலையான ஹைபோநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான ஹைட்ரேஷன் தசை பலவீனம், பிடிப்புகள் போன்ற கடும் அறிகுறிகளை ஏற்படுத்தும் என்கிறார்.



உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்காத நிலையில் உங்கள் சிறுநீர் நிறமற்றதாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ வெளியேறினால் உங்கள் உடலில் போதுமான அளவு திரவம் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். டாக்டர் அசுதோஷின் கூற்றுப்படி, சராசரியாக ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு தினமும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவையில் உள்ள சூத்திரம் ஒருவரது உடல் எடையில் ஒவ்வொரு 20 கிலோவிற்கும் 1 லிட்டர் தண்ணீர் தேவை. அதாவது உங்கள் உடல் எடை 60 கிலோவாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 லிட்டர் தேவை. உடற்பயிற்சி, சுற்றுச்சூழல், ஒட்டுமொத்த ஆரோக்கியம், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் ஒரு நபர் தனது தினசரி நீர் குடிக்கும் அளவை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளார் டாக்டர் அசுதோஷ்.

also read |  மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு நிறைந்த உணவுகள்... நிபுணர்கள் எச்சரிக்கை

இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரிச்சா தனது இன்ஸ்டா பதிவில் ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 15.5 கப் (3.7 லிட்டர்) திரவங்களையும், பெண்கள் சுமார் 11.5 கப் (2.7 லிட்டர்) திரவங்களையும் குடிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இந்த பரிந்துரை தண்ணீர், பிற பானங்கள் மற்றும் உணவில் இருக்கும் திரவங்களை உள்ளடக்கியது. தினசரி திரவ உட்கொள்ளலில் சுமார் 20% பொதுவாக உணவில் இருந்தும், மீதமுள்ளவை பானங்களிலிருந்தும் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 




 

ஓவர் ஹைட்ரேஷன் அதாவது உடலில் தண்ணீர் அதிகமாக இருப்பதன் அறிகுறிகள்:

  •  குமட்டல் மற்றும் வாந்தி

  • தலைவலி

  • குழப்பம் அல்லது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள்

  • பிடிப்புகள்

  • தசை பலவீனம்


ஓவர் ஹைட்ரேஷன் குறிப்பாக வயதானவர்களிடையே ரத்தத்தில் ஆபத்தான குறைந்த சோடியம் அளவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். உடலில் அதிகம் நீர் இருப்பது உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகளின் அளவை மிகவும் நீர்த்து போக செய்கிறது. உடலில் அதிகப்படியான நீர் இருப்பது இதயம் மற்றும் சிறுநீரகம் பலவீனமாக உள்ள ஒருவருக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்கிறார் ரிச்சா.

ALSO READ | முகத்துக்கு ஃப்ளீச் செய்யும் பழக்கம் இருக்கா..? அப்ப மறக்காமல் இத ஃபாலோ பண்ணிடுங்க..!
 

ஓவர் ஹைட்ரேஷன் தசை பலவீனம், பிடிப்புகள்ம் சில நேரங்களில் சுயநினைவின்மைக்கு வழிவகுக்கும். உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, 50% குடி நீரையும், 50% பழங்கள், பால், காய்கறிகள் போன்ற பிறவற்றை நீர் ஆதாரங்களாகவும் உட்கொள்ள வேண்டியது அவசியம், இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை நிறைவு செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Drinking water, Water

அடுத்த செய்தி