கொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா..? பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..!

கொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா..? பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..!

கொரோனா

பாதுக்காப்பான நெறிமுறைகளை கடைபிடிக்கும் அதேவேளையில் ஊட்டச்சத்து, பிட்னஸ் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும்.

  • Share this:
கொரோனாவில் இருந்து மீண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், பாதிப்பில் இருந்து மீண்டபிறகு அதனால் ஏற்படும் மனக் குழப்பங்கள், உடல் பாதிப்புகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கொரோனாவில் இருந்து மீண்ட பலர் இதயம், நுரையீரல் போன்ற உடலியல் பிரச்சனைகளும், சோர்வு, பலவீனம் போன்ற எதிர்மறையான தாக்கங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது.

கொரோனா பாதித்தவர்கள் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு மருத்துவர் திக்ஷா பாவ்சார் ( (Dr Dixa Bhavsar) ஒரு சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். பாதுக்காப்பான நெறிமுறைகளை கடைபிடிக்கும் அதேவேளையில் ஊட்டச்சத்து, பிட்னஸ் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும்.

* எளிமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மெதுவாக நடப்பது, மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உடம்புக்கு தற்போது ஓய்வு தேவைப்படுவதால் பலமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.

* நாள்தோறும் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.* தினம்தோறும் ஒரு பேரீட்சை, ஒரு சில உலர் திராட்சை, இரண்டு பாதாம் மற்றும் இரண்டு வால்நட் ஆகியவற்றை காலையில் சாப்பிட வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் இரவு முழுவதும் ஊறவைத்துவிடுங்கள்.

* எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். தானியம் மற்றும் பயிறுவகைகளை சூப் வைத்து சாப்பிடலாம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அல்லது பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

* ஒரே வகை உணவுகளை நாள்தோறும் சாப்பிடுவதுபோல் இருந்தால், மாற்றாக கிச்சடி வகை உணவுகளை சாப்பிடலாம்.

கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட பிராணயாமா எப்படி உதவி செய்கிறது?

* கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சூப்பாக வைத்து வாரத்தில் இரண்டு மூன்று முறை காலை நேரத்தில் குடிப்பத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

*வாரத்தில் இரண்டு மூன்று முறை முருங்கை இலையில் சூப் வைத்து சாப்பிடலாம்* சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் ஆகியவற்றில் டீ வைத்து இரண்டு முறை குடிக்கலாம்

* ஆரோக்கியமான தூக்கம் உங்களை நோயில் இருந்து விடுபட வைக்கும் என்பதால், நாள்தோறும் முன்கூட்டியே இரவு நேரத்தில் தூங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், அவை குறித்தும் சில முக்கியமான தகவல்களை மருத்துவர் திக்ஷா பாவ்சார் கூறியுள்ளார்.

* காலையில் அதிகாலையில் எழுந்து இதமான சூரிய ஒளியை உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். மேலும், நேர்மறையான சிந்தனை கிடைப்பதுடன், வைட்டமின் டி மற்றும் கால்சியமும் கிடைக்கும்.* ஏற்கனவே கூறியதுபோல் மூச்சுப்பயிற்சி அவசியம். இது உடலில் ஆக்சிஜன் அளவைக் கூட்டும். பிராணாயாமா ஆசனங்களையும் செய்யலாம்.

* செல்போன் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கூடுமான அளவில் தவிர்க்க வேண்டும். செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

* வெளியில் எங்கே சென்றாலும் மாஸ்க் அணிவதுடன், சமூக விலகலையும் கடைபிடிக்க வேண்டும்.
Published by:Sivaranjani E
First published: