Home /News /lifestyle /

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 10 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் - ஆய்வில் தகவல்

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 10 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் - ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்

இந்த ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு நிறுவனத்தின் டேட்டாக்களை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒருவரின் உடல் நலத்தை பேணுவதில் தினசரி உடற்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதிலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் கூட, உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தினசரி 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக அவர்களது ஆயுட்காலம் நீளுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தினசரி 20 அல்லது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு நிறுவனத்தின் டேட்டாக்களை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரையிலும் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் உடல் அதிர்வுகளை கண்டறியும் கருவியை பயன்படுத்தி உடல் நலன் குறித்து ஆய்வு செய்து, அதனை 40 வயது முதல் 85 வயது வரையிலான 4,850 பங்கேற்பாளர்களிடம் ஒப்பிட்டு சோதித்துப் பார்த்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

t

அமெரிக்காவில் 40 முதல் 85 வயது வரையிலான நபர்கள் தினசரி 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் ஆண்டுக்கு சராசரி ஒரு 1,10,000 உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 10, 20, 30 என்ற நிமிடக் கணக்கில் உடற்பயிற்சிகளை அதிகரிப்பதன் மூலமாக அதற்கு ஏற்ப உயிரிழப்பு எண்ணிக்கை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

பணியிடத்தில் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதற்கு பதிலாக, 3 மணி நேரம் நின்று கொண்டிருந்தால் கூட இதய வால்வுகளின் ஆரோக்கியம் மேம்படும் என்று ஐதராபாத்தில் உள்ள யசோதா ஹாஸ்பிடல் மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

கீரையை அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா..? இந்த பிரச்சனை இருக்கிறவங்க கவனமாக இருங்கள்...

நகரமயம் அதிகரித்து வரும் சூழலில் ஒவ்வொரு நபருக்கும் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்றும், தூக்கமின்மை, குழந்தையின்மை, கால் பிளாடர், கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது காரணமாக அமைகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



உங்கள் இதயத்துடிப்பை மேம்படுத்தவும், தோல்களை வலிமையாக மாற்றவும் உடற்பயிற்சி மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்பவர்களை காட்டிலும், நடப்பது, மாடிப்படி ஏறுவது, நிற்பது மற்றும் ஓடிக்கொண்டே இருப்பது என்ற ரீதியில் பணி செய்பவர்களின் உடல் நலன் மேம்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் என்ற கணக்கில் தொடங்கி, நாளடைவில் வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Exercise, Workout

அடுத்த செய்தி