ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓரல் செக்ஸ் மூலம் கேன்சர் ஏற்படுமா? - அவற்றை தடுப்பது எப்படி?

ஓரல் செக்ஸ் மூலம் கேன்சர் ஏற்படுமா? - அவற்றை தடுப்பது எப்படி?

ஓரல் செக்ஸ்

ஓரல் செக்ஸ்

HPV தொற்று ஏற்பட்டாலே உடல் நலம் பாதிக்கப்படாது. பெரும்பாலான HPV தொற்றுகள் தானாகவே, ஓரிரு ஆண்டுகளில் சரியாகிவிடும். ஆனால், அவ்வாறு சரியாகாத பட்சத்தில் குரல்வளைப் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடலில் செல்கள் அபரிமிதமான வளர்ச்சி அடையும் பொழுது அது புற்றாக மாறுகிறது. இருப்பினும் ஒரு சில புற்று நோய்களுக்கு, குறிப்பிட்ட பழக்க வழக்கங்கள் காரணமாக உள்ளன. உதாரணமாக புகை பிடிப்பது, புகையிலை பழக்கம், மது ஆகியவை திராட் கேன்சரென்று கூறப்படும் தொண்டை புற்று நோய்க்கு காரணங்களாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல், ஓரல் செக்ஸ் என்று கூறப்படும் வாய்வழி புணர்தல் மூலமாகவும் இந்த புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஓரல் செக்ஸ் என்பது பாலியல் உறவின் முன்விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. இது கணவன் மனைவி உறவை மேம்படுத்தி, பாலியல் இரவில் திருப்தியடைய பெரிய உறுதியாக இருக்கிறது. ஆனால், சில நேரங்களில், ஓரல் செக்ஸ் என்பது HPV வைரஸ் தொற்று ஏற்படுத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

ஓரல் செக்ஸ் மூலம் கேன்சர் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

ஓரல் செக்ஸ் மற்றும் கேன்சர் ஏற்படும் அபாயம் இரண்டுக்கும் முதலில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, ஓரல் செக்சில் ஈடுபட்டாலே, தொண்டைப் புற்றுநோய் ஏற்படாது. அதற்கு வைரஸ் தொற்று தான் காரணமாக இருக்கிறது.

ஒரு பார்ட்னருக்கு மேல், பல நபர்களுடன் ஓரல் செக்சில் ஈடுபட்டால், இந்தத் தொற்று ஏற்படும் ஆபத்தும் அதன் மூலம் கேன்சர் உண்டாகும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

ஹியூமன் பாப்பிலோ வைரஸ் என்பது ஒரு நபரிடம் இருந்து பாலியல் உறவு கொள்ளும் போது மற்றவருக்கு பரவும். ஆனால், இந்தத் தொற்று உடலில் தாக்கத்தை ஏற்படுத்த, அறிகுறிகளை வெளிப்படுத்த நீண்ட காலம் ஆகலாம். தொற்று பாதிப்பு உடலில் இருந்தாலுமே, அறிகுறிகள் தோன்றாது. ஆனால், வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கும் போது, அது உடலில் இருக்கும் மியூக்கஸ் மெம்பிரேன்களை தாக்கத் தொடங்கும். செர்விக்ஸ்ஸின் லைனிங், பிட்டம், பிறப்புறுப்பு, நாக்கு, தொண்டை ஆகிய இடங்களில் இருக்கும் மியூக்கஸ் மெம்பிரேன்கள் பாதிப்படையும். HPV வைரஸ் தொற்றால் 70% அளவுக்கு குரல்வளை புற்றுநோய், டான்சில் புற்றுநோய், ஆகியவை ஏற்படுகிறது.

HPV தொற்று ஏற்பட்டாலே ஆபத்தா?

ஏற்கனவே கூறியுள்ளது போல, HPV தொற்று ஏற்பட்டாலே உடல் நலம் பாதிக்கப்படாது. பெரும்பாலான HPV தொற்றுகள் தானாகவே, ஓரிரு ஆண்டுகளில் சரியாகிவிடும். ஆனால், அவ்வாறு சரியாகாத பட்சத்தில் குரல்வளைப் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படலாம். மேலும், வேறு சில உடல் உபாதைகளும் உண்டாகலாம்.

ஓரல் செக்சால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள்.?

பொதுவாகவே ஓரல் செக்ஸில் ஈடுபடும் நபர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். பாதுகாப்பு இல்லாத ஓரல் செக்ஸ் என்பது பால்வினை நோய்கள் மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.

HPV தொற்றைத் தடுப்பது எப்படி?

பாதுகாப்பற்ற உடலுறவு மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட செக்ஷுவல் பார்ட்னர்கள் மூலம் HPV தொற்று பரவும். எனவே, பின்வருபவற்றை கடைபிடித்தால், HPV தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
பாதுகாப்பான பாலுறவில் ஈடுபடவும். ஓரல் செக்சில் ஈடுபடும் போது, காண்டம் அணியலாம் அல்லது டென்டல் டாம்ஸ் பயன்படுத்தலாம். இதன் மூலம், இருவரில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும், பரவாது.
நீங்களும் உங்கள் பார்ட்னரும் உடல் ஆரோக்கியம், மெடிகல் ஹிஸ்டரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் முன்பு, தொற்று பாதிப்பு ஏதேனும் இருந்தால், அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட செக்ஷுவல் பார்ட்னர்கள் இருந்தால், பாதுகாப்பு அவசியம். அது மட்டுமில்லாமல், அவ்வபோது பாலியல் நோய்த்தொற்று ஏதேனும் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.
HPV நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி உள்ளது. அதை செலுத்திக் கொண்டாலும் தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்படும் கேன்சரைத் தடுக்கலாம்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Oral sex, Sex doubts, Sexual Health, Sexual issues