Home /News /lifestyle /

Oral Cancer : வாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டும் அறிகுறிகள்... உஷாராக இருங்கள்...

Oral Cancer : வாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டும் அறிகுறிகள்... உஷாராக இருங்கள்...

வாய் புற்றுநோய்

வாய் புற்றுநோய்

லட்சத்தில் நான்கு நபர்களுக்கு ஓரல் கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஓரல் கேன்சர் எச்சரிக்கைக அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான நோய்களில் ஒன்று புற்றுநோய். நோயின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் முன்னரே உயிரைக் கொல்லும் அளவுக்கு உடல் முழுவதும் கேன்ஸர் செல்கள் வளர்ந்து விடுகிறது. எனவே புற்றுநோய் பற்றி அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். லட்சத்தில் நான்கு நபர்களுக்கு ஓரல் கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஓரல் கேன்சர் எச்சரிக்கைக அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாய்ப்பகுதிகளில் ஏற்படும் புண், காயங்கள் ஆற நீண்ட நேரம் எடுக்கும்

வைட்டமின் சி குறைபாடு, காரமான உணவுகளை சாப்பிடுவது, நாக்கை கடித்துக் கொள்வது, விபத்து, போன்ற பல்வேறு காரணங்களால் வாயில் புண்கள், அழற்சி, மவுத் அல்சர் என்று காணப்படும். பெரும்பாலும் இவை ஒரு சில நாட்கள் முதல் ஒரு சில வாரங்களில் விடும். ஆனால் நீண்ட நேரம் வாயில் ஏற்படும் புண்கள் ஆறவில்லை என்றால் அது ஓரல் கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாயில் வெள்ளை நிறத்தில் திட்டுக்கள்

வாய்ப்பகுதியில் வெள்ளை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுகளாக காணப்பட்டால் அது கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட கால அல்சர், நெஞ்செரிச்சல் அல்லது, செரிமான கோளாறு ஆகியவற்றால் கூட இவ்வாறு காணப்படலாம். இந்த அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.



முன் தொண்டை அல்லது வாய்ப்பகுதியில் வீக்கம்

கேன்சரின் முதல் அறிகுறியே, வழியில்லாத கட்டி அல்லது வீக்கம் தான். உங்களின் வாய்க்குள் அல்லது தொண்டையின் முன் பகுதியில் அவ்வாறு காணப்பட்டால், ஆனால் அதனால் உங்களுக்கு எந்த விதமான அசௌகரியமும் இல்லை என்றால், அது கேன்சரின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

அதே போல, தொற்று அல்லது சைனஸ், சளி இல்லாத பட்சத்தில், உணவு விழுங்குவது வலித்தால், அது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?

காரணங்கள் இல்லாமல் தாடை வலி, பற்கள் விழுதல்

வலி, வீக்கம், புண் என்று ஓரல் ஹெல்த் பலவிதமாக பாதிக்கப்படலாம். உதாரணமாக, குளிர் மற்றும் சளியால் தாடை வலிக்கலாம், நோய்த்தொற்றால் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் வலிக்கலாம். ஆனால், காரணமே இல்லாமல் வலித்தல் அல்லது காரணமே இல்லாமல், பற்கள் இறுக்கம் தளர்ந்து போனால் அல்லது விழுந்தால், அது கேன்சரின் அறிகுறியாகும்.



காது வலி

தொண்டை வலி என்றால் சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது, காது வலிக்கும். காதுகளில் இன்ஃபெக்ஷன் என்றால், அது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இவை எதுவும் இல்லாமல், காதுகள் வலித்தால், அது வாய்ப்பகுதி புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

உங்களுக்கே தெரியாமல் சியா விதைகள் தரும் 10 நன்மைகள் : தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க...

எவ்வளவு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி கிட்டத்தட்ட 35,00,000 மக்கள் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து பற்கள் தேய்ந்து போதல், ஈறுகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் அவதிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் பழக்கம், புகையிலை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் வாய்ப்புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Oral Cancer

அடுத்த செய்தி