• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வாய் புற்றுநோயால் 3.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவது ஏன்..? தடுக்கும் வழிமுறைகள் என்ன?

வாய் புற்றுநோயால் 3.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவது ஏன்..? தடுக்கும் வழிமுறைகள் என்ன?

வாய் புற்றுநோய் | Oral Cancer

வாய் புற்றுநோய் | Oral Cancer

தினசரி இரு முறை பல்துலக்குவது, நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிப்பது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  • Share this:
தினமும் இரண்டு முறை பல்துலக்குவது, சாப்பிட்ட பிறகு வாயில் தண்ணீர் வைத்து கொப்பளிப்பது, சாக்லேட்டுகள் மற்றும் குளிர் பானங்களின் நுகர்வை குறைத்துக்கொள்வது ஆகியவை ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரத்திற்கான முதல் படிகள் ஆகும். வாய்வழி மற்றும் பல் மூலம் தொற்றுகள் மற்றும் வாய் புற்றுநோயைத் தடுக்க வாய்வழி சுகாதார விழிப்புணர்வு மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, வாய்வழி தொற்றால் உலகில் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோசமான பல் துலக்குதல், இனிப்புகள் அல்லது ஜங்க்-உணவுகளை அதிகப்படியாக சாப்பிடுதல், அதிக அளவில் காபி அல்லது தேநீர் குடித்தல் மற்றும் புகைபிடித்தல், புகையிலை, மதுப்பழக்கம் ஆகிய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகள் வாய்வழி உடல்நலக் குறைவுக்கு காரணங்கள் அறியப்படுகின்றன. மேற்கண்ட ஆரோக்கியமற்ற செயல்களால் ஏற்படும் கேவிட்டி பிரச்சனை, ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் ஆகிய பல் நோய்கள் மிகவும் பொதுவானது. இருப்பினும், வாய்வழி ஆரோக்கியத்தை சரியான முறையில் பராமரிப்பதில் நிரந்தர தளர்வு ஏற்படும் போது அது வாய் புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

கன்னங்கள், உதடுகள், வாய், ஈறுகள், நாக்கு, டான்சில்ஸ் மற்றும் தொண்டையின் பின்புறம் வரும் புற்றுநோய்கள் வாய் புற்றுநோய் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மிகவும் பொதுவான மூன்று வகை புற்றுநோய்களில் ஒன்றாகும்.

வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் அதிகளவிலான புகையிலை அல்லது ஆல்கஹால் நுகர்வு, தொடர்ச்சியாக கவனிக்கப்படாத பல் பிரச்சினைகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பாலியல் மூலம் பரவும் வைரஸ்கள் ஆகியவை அடங்கும். இதேபோல வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் ஓரோபார்னீஜியல் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக காணப்படுகிறது.

குளிர்ச்சியான உணவுப் பொருளை சாப்பிடும்போது பல் கூச்சம் உண்டாவது ஏன்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லும் பழக்கம், ஆல்கஹால் ஆகியவற்றின் நுகர்வு வளரும் நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் வாய் மற்றும் ஓரோபார்னீஜியல் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரித்து வருகிறது. புகையிலை கன்னங்கள் மற்றும் ஈறுகளில் புற்றுநோயின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது. அதேபோல, அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வது தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.பான்பராக் அல்லது வெற்றிலைப் போடுவது வாய் புற்றுநோயை வளர்ப்பதில் பங்களிக்கிறது. மேலும், பல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பின்னர் அது வாய் புற்றுநோயாக மாறுகிறது. வாய் புற்றுநோய்கள் சில நேரங்களில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலமும் உருவாகின்றன. இது பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவும் வைரஸ் தொற்று ஆகும். HPV சுருங்கியபின் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது புற்றுநோய் பன்மடங்காக உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. HPV பாதிப்பு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புடன் தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தும்.

சிகிச்சை முறைகள்:

வாய் புற்றுநோயை நிர்வகிக்க வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது ஆரம்பகால நோயறிதலுக்கு வழிவகுக்கும். பின்னர் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை மூலம் இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

உங்கள் வாய் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது வாய் புற்றுநோயைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, உங்கள் வாயும் பாக்டீரியாவுடன் அடிக்கடி தொடர்பு கொள்கின்றன. இருப்பினும், வாய் உங்கள் செரிமான மற்றும் சுவாசக்குழாய்களுக்கான நுழைவு புள்ளிகளாக இருப்பதால், தொற்றுகள் எளிதில் பரவும் அபாயம் அதகம் இருக்கிறது.

எனவே தினசரி இரு முறை பல்துலக்குவது, நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிப்பது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், புகைப்பழக்கம்,மது ஆகியவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, உங்கள் பற்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவ்வப்போது பல் பரிசோதனைகளை செய்துகொள்வதும் சிறந்தது. இதன் விளைவாக உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பராமரிக்கப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: