Condoms: குடும்ப கட்டுப்பாடு குறித்த ஆய்வு மேற்கொண்ட அரசு சாரா அமைப்பு ஒன்று, இந்தியாவில் 10ல் ஒரு நபர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது, குடும்ப கட்டுப்பாடு என்பது பெண்களின் பொறுப்பு என ஆண்கள் விலகிச் செல்லும் மனநிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
உலக மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதும், பெண்கள் Sterilisation எனப்படும் மருத்துவ ரீதியிலான கர்ப்பத் தடை செயல்முறை செய்துகொள்வதும் இதில் முக்கியமானவை.
ஆனால், 2019 - 2021ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில், 10ல் ஒரு ஆண் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதும், அதே நேரத்தில் பெண்கள் Sterilisation செய்வது அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குடும்ப கட்டுப்பாடு பொறுப்பு என்பது பெண்களை சார்ந்தது என ஆண்கள் கருதுவதாகவும். ஒட்டுமொத்த ஆண்களில் வெறும் 9.5% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாகவும். அதே நேரத்தில் 37.9% பெண்கள் Sterilisation முறையை செய்து கொண்டிருப்பதாகவும் 2019-21 தேசிய குடும்ப நல ஆய்வு கூறுகிறது.
Also read: ஒரே மாதத்தில் 87,000 கொரோனா மரணங்கள்.. கலக்கத்தில் ரஷ்யா
நகரப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களில் 13.6% பேர் ஆணுறை பயன்படுத்துகின்றனர், ஊரக பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் 7.6% ஆணுறை பயன்படுத்துகின்றனர். ஆனால், நகர (38.7%) மற்றும் ஊரக
(36.3%) பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அதிக அளவில் Sterilisation செய்துள்ளனர்.
Sterilisation அதிகளவில் செய்யப்படும் மாநிலங்களில் பீகார் முதலிடத்திலும், கோவா 2ம் இடத்திலும், மத்திய பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதே போல ஆணுறை பயன்பாட்டில் உத்தரகண்ட் மாநிலம் முதலிடத்திலும், சண்டிகர் யூனியன் பிரதேசம் முதல் இடத்திலும் உள்ளன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்வில் 5.6% ஆக இருந்த ஆணுறை பயன்பாடு இந்த முறை 9.5% ஆக ஒட்டுமொத்த அளவில் உயர்ந்துள்ளது.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை என்ற தன்னார்வல அமைப்பு நாடு தழுவிய அளவில் ‘தேசிய குடும்ப நல ஆய்வில்’ ஈடுபட்டு அது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே 4 முறை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 2019 - 2021 காலகட்டத்தில் 5வது முறையாக நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.