நோய் தொடர்பான அறிகுறிகளை கூகுள் மூலம் சுயமாக கண்டறிவது சரியா? மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

மாதிரி படம்

இது சிக்கலான முடிவுகளின் தீவிரத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் அவை கொடுக்கும் பதில்களால் ஒருவருக்கு மேலும் மனஅழுத்தம் அதிகரிக்கிறது.

  • Share this:
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள், எந்த ஒரு விஷயத்திற்கும் விரைவான பதில்களை தேட கூகுள் சர்ச் என்ஜினை நாடி வருகின்றனர். அதிலும் பருவகால நோய் அல்லது வேறு ஏதேனும் பொதுவான நோய்களுக்கு ஒத்த சில அறிகுறிகளைக் பெற்றிருக்கும் போதெல்லாம் பலர் கூகுள் சர்ச் மூலம் அறிகுறிகளுக்கான காரணங்களை சுய ஆய்வு செய்துகொள்கின்றனர்.

இது சிக்கலான முடிவுகளின் தீவிரத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் அவை கொடுக்கும் பதில்களால் ஒருவருக்கு மேலும் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஏனெனில் இதுபோன்ற சர்ச் என்ஜின் அளிக்கும் பதில்கள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, மருத்துவ விஷயங்களில். இதனால்தான் மருத்துவர்கள் சர்ச் என்ஜின் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் சுய ஆய்வு செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், முலுண்ட், டாக்டர் சஞ்சய் ஷா மற்றும் டாக்டர் பிரதீப் ஷா ஆகியோர் இது குறித்து மக்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர்கள் தெரிவித்தாவது, டிஜிட்டல் புரட்சி நம் வாழ்வின் பல அம்சங்களை மாற்றிவிட்டது. குறிப்பாக உடல்நலம் தொடர்பான தகவல்கள் எளிதாகவும் சுதந்திரமாகவும் கிடைப்பதால், நம் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை அதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. "முந்தைய காலங்களில், 10 நோயாளிகளில் ஒருவர் இணையத்தில் கிடைக்கும் சுகாதார தகவல்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 10 பேரில் 9 ஆக மாறியுள்ளது" என்று அவர்கள் கூறியுள்ளனர்.இது கட்டாயம் உண்மையாக உள்ளது. ஏனெனில் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் வீட்டிலேயே கை சுத்திகரிப்பாளர்களை உருவாக்குவதற்கான வழிகளைத் கூகுளில் தேடிக்கொண்டிருந்த அதே சமயத்தில், பலர், அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய அறிகுறிகளைக் கூகுளில் தேடினார்கள். ஆனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு முரணானது மற்றும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுய -நோயறிதலின் ஆபத்து:

பெரும்பாலும், சுய-நோயறிதல் மிகவும் பயமுறுத்தும் ஒரு முடிவை சுட்டிக்காட்டுகிறது. இது தவறான நோயறிதலுக்கு அல்லது பயங்கரமாக நோயறிதலுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ‘தலைவலி’ என்று கூகுளில் தேடும்போது, தலைவலியின் வெவ்வேறு விளக்கங்களைக் காட்டும் 20 முடிவுகளை நீங்கள் காணலாம். ஒவ்வொன்றும் மற்றதை விட பயங்கரமானவையாக இருக்கும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைவலி மிகச்சிறிய பிரச்சனையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இணைய தேடல் புற்றுநோய் கட்டி அல்லது வேறு சில நரம்பியல் சிக்கலின் அறிகுறிகளைக் காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் இது அதிக அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில், குறைவான நோயறிதலைக் காண்பீர்கள். ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே பெரிய பிரச்சனை இருக்கலாம். இது வாழ்க்கைத் தரத்தில் கடுமையான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது மோசமான மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம். சிலர், இணையத் தேடல்கள் மூலம் மருத்துங்களை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சுய மருந்துகளில் கடுமையான பாதகமான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடிய மருந்தியல் அபாயங்கள் அடங்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.‘சைபர்காண்ட்ரியா’ பற்றி அறிந்து கொள்ளுங்கள்

சைபர்காண்ட்ரியா என்பது ஒரு நபரின் உடல்நலம் குறித்த கவலையைக் குறிக்கிறது. இது மருத்துவத் தகவல்களைத் தேடுவதற்கு இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, "உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி இணையம் என்ன கூறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க மக்கள் இணையத்தை நாடுவதால், இது சமீபத்தில் ஒரு பிரச்சினையாகிவிட்டது" என்று கூறியுள்ளனர். சைபர்காண்ட்ரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண உடல் மாற்றங்கள் மற்றும் சிறிய உடல் அறிகுறிகளை தீவிர நோய் அல்லது நோயின் அறிகுறிகள் என்று நினைத்து தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இதுபோன்ற உடல்நலக் கவலையுடன் வாழும் பலருக்கு, பயம் மிகவும் கடுமையானதாகிவிடும். அது வேலை மற்றும் உறவுகளில் தலையிடக்கூடும். ” என கூறியுள்ளனர்.

இரவில் நீண்ட நேரம் கேஜெட்டுகளை பயன்படுத்தினால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா..? எச்சரிக்கும் ஆய்வு..!

மேலும் பேசிய மருத்துவர்கள், "சில நோயாளிகள் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நோய் குறித்து தெரிந்துகொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். சிலர் ஆய்வக அறிக்கைகள் மற்றும் மருத்துவ விசாரணைகளுடன் வருகிறார்கள். இது ஆன்லைன் தேடலின் விளைவாக நடக்கிறது. நிச்சயமாக, நாங்கள் அவர்களை அதிகாரம் பெற்ற நோயாளிகள் என்று அழைப்போம். பெரும்பாலும், இந்த மக்கள் மருத்துவர்கள் வழங்கும் சுகாதார ஆலோசனை மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறார்கள். எந்தவொரு தொழில்நுட்பமும் அல்லது இணையத் தேடலும் தொழில்முறை மருத்துவ உதவியை முழுமையாக மாற்ற முடியாது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம், ”என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆன்லைனில் நோய் குறித்து தேடும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

* மருத்துவர்கள் அல்லாமல் யார் வேண்டுமானாலும் மருத்துவம் சார்ந்த பதிவினை ஆன்லைனில் வெளியிடலாம்.

* ஆன்லைன் தேடலை உங்கள் தொடக்க புள்ளியாக பாருங்கள். அதனை இறுதி பதிலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

* சுகாதார கிளினிக்குகள், மருத்துவமனை வலைத்தளங்கள், புகழ்பெற்ற சுகாதார இதழ்கள் மற்றும் வெளியீடுகள் போன்ற நம்பகமான வலைத்தளங்களிலிருந்து தகவல்களைத் தேடுங்கள்

* மருத்துவ நிபுணர்களிடமிருந்து ஆலோசனைப் பெறுவதை தாமதப்படுத்த வேண்டாம்

* உங்கள் பிரச்சனை குறித்து ஆன்லைன் ஆராய்ச்சி செய்யுங்கள். பின்னர் உங்கள் கேள்விகளை எழுதுங்கள், உங்கள் மருத்துவரை அல்லது உங்கள் அருகிலுள்ள ஒரு சுகாதார மையத்தை அழைத்து உங்களது எல்லா கேள்விகளுக்கும் பதிலை பெற்றுக்கொள்ளவுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: