நீங்க பப்ஜி கேமுக்கு அடிமையா..? ஆன்லைன் கேம் பிரியர்கள் இதை படித்துவிட்டு விளையாடவும்..!
தூய்மையாக வைத்துக்கொள்ளும் பணிகளை செய்வதை தள்ளிப்போடுகின்றனர். உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கின்றனர்.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: April 18, 2020, 2:03 PM IST
வீட்டில் முடங்கியிருப்பதால் பலரும் ஆன்லைன் கேமில் முடங்கியுள்ளனர். பலருக்கும் அதுதான் பொழுதுபோக்கு என்றாலும் அதில் இருக்கும் பக்கவிளைவுகளையும் மறந்துவிடக் கூடாது. இதுவரை தெரியாது என்றால் உங்களுக்கு உதவவே இந்தக் கட்டுரை.
ஆன்லைன் கேம் மனதளவில் பாதிப்பை உண்டாக்கும். மன அழுத்தம், தனிமை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இது தொடர்கதையானால் போதைக்குக் கூட வழிகாட்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீண்ட நேரத்திற்கு செல்ஃபோன் திரையைப் பார்ப்பதும், கண்களைக் கூர்ந்து கவனித்து வேலைக் கொடுப்பதும் கண் பார்வைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். அதோடு ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். 
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆன்லைன் கேம் அடிக்ஷன் கழுத்து, முதுகுத் தண்டு வடத்தை பாதிக்கும் என கண்டறிந்துள்ளது. இளமையிலேயே முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும் அதிகரிக்கவும் ஆன்லைன் கேம்தான் காரணம் என்கின்றனர். இதற்கு நீண்ட நேரம் ஒழுங்கற்ற முறையில் அமர்ந்து விளையாடுவதே காரணம்.
உடல் பருமன் : உடலுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள், வேலைகளை செய்யாமல் அமர்ந்த இடத்திலேயே விளையாடுவது கொழுப்பை சேர்க்கும். இதன் தாக்கம் உடல் பருமனாக மாறும்.சுகாதாரமின்மை : கேமிலேயே மூழ்கியிருப்பதால் குளிப்பது, தங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பணிகளை செய்வதை தள்ளிப்போடுகின்றனர். உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கின்றனர்.
பார்க்க :