Home /News /lifestyle /

கொரோனாவால் நாக்கு அழற்சி, தோல் வெடிப்பு பாதிப்பு வரலாம்.. புதிய அறிகுறிகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்..

கொரோனாவால் நாக்கு அழற்சி, தோல் வெடிப்பு பாதிப்பு வரலாம்.. புதிய அறிகுறிகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்..

கோவிட் நாக்கு: கொரோனாவின் புதிய அறிகுறிகள்

கோவிட் நாக்கு: கொரோனாவின் புதிய அறிகுறிகள்

இந்த ஆய்வு 2020 ஏப்ரல் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதித்த நோயாளிகளில் சுமார் 26% பேர் வாயில் ஏற்படும் ராஷஸ் என்று சொல்லக்கூடிய தடிப்புகளால் அவதிப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மேலும் படிக்கவும் ...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் நான்கில் ஒருவர், நாக்கு புடைப்பு மற்றும் நாக்கு அழற்சியால் அவதிப்படுகிறார்கள் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறியை வல்லுநர்கள் “கோவிட் நாக்கு” என்று அழைக்கிறார்கள். இது தவிர, சில கொரோனா நோயாளிகளுக்கு தோல் வெடிப்புகளும் வருகிறதாம்.

இது கொரோனா பாதிப்பால் ஏற்படும் முக்கிய அறிகுறிகளில் ஒன்று எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் தொற்றுநோயியல் நிபுணராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் டிம் ஸ்பெக்டர் இதுபோன்ற புதிய அறிகுறி தொடர்பான கவலைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கோவிட் நாக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பல படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

மேலும் ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ் அறிகுறிகளின் பட்டியலில் இவற்றை சேர்க்குமாறு வல்லுநர்கள் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பிடம் (NHS) கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் , இது போன்ற அறியப்படாத கொரோனா அறிகுறிகளை கொண்டவர்களை கண்டறிய முடியாது என்றும், அதனால் அவர்களுக்கான சிகிச்சை வழங்கமுடியாமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயினின் ஹாஸ்பிடல் யுனிவர்சிட்டாரியோ லா பாஸின் (Hospital Universitario La Paz) விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வை நடத்தியது. கொரோனா தொற்றுநோய் பரவிய காலம் முதல் ஏராளமான நோயாளிகளை இந்த குழு பகுப்பாய்வு செய்துள்ளதுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சில முக்கிய கண்டுபிடிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கோவிட் நாக்கு: கொரோனாவின் புதிய அறிகுறிகள்


அவை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு 2020 ஏப்ரல் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதித்த நோயாளிகளில் சுமார் 26% பேர் வாயில் ஏற்படும் ராஷஸ் என்று சொல்லக்கூடிய தடிப்புகளால் அவதிப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும், 46% நோயாளிகள் கை, கால்களில் தடிப்புகள் போன்ற பிரச்சைகளால் அவதிக்கு உள்ளாகின்றனர் என கூறப்படுகிறது.

நோயாளிகளின் நாக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் ட்ரான்சியன்ட் லிங்கியூவல் பாப்பிலிடிஸை உள்ளடக்கியது. அவை நோயாளி நாக்கின் மேற்பரப்பில் சிறிய புடைப்புகளாகத் தோன்றும். இது தொடர்பாக தி சன் வெளியிட்ட அறிக்கையில், " 6.9% நோயாளிகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறியாக தீங்கற்ற மற்றும் தொற்று அல்லாத வாய் புண்கள் காணப்படுகின்றன. இதுதவிர மருத்துவ ரீதியாக குளோசிடிஸ் என அழைக்கப்படும் நாக்கு அழற்சி, 6.6% நோயாளிகளுக்கு ஒரு காரணியாக இருந்தது.

அதில் அவர்களின் நாக்கு வீங்கி, நிறம் மாறி காணப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 4% நோயாளிகள் தங்கள் நாக்கின் மேற்பரப்பில் வெண்மையான பூச்சு தோன்றுவதை கண்டறிந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் கைகளிலும் கால்களிலும், மிகவும் பொதுவான தோல் வெடிப்பு அறிகுறிகளும் காணப்பட்டன. இது டிபியூஸ் டெஸ்குவாமேசன் என அழைக்கப்படுகிறது.

கோவிட் நாக்கு: கொரோனாவின் புதிய அறிகுறிகள்


மேலும், சுமார் 15% கொரோனா நோயாளிகளின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் சிவப்பு-பழுப்பு நிற அடையாளங்கள் இருப்பதை ஆராய்ச்சிக்குழு கண்டறிந்தது. அந்த இடங்களில் அரிப்பு போன்ற அசௌகரிய உணர்வுகள் ஏற்பட்டு நோயாளிகள் அப்பகுதியை சொறிந்தால் இதுபோன்ற அடையாளங்கள் தோன்றியுள்ளன. 7%-த்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள், பாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே எரித்ரோடிசெஸ்தீசியா என்று சொல்லக்கூடிய எரிச்சல் உணர்வை கொண்டிருந்ததாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் அல்முடேனா நுனோ - கோன்சலஸ் இது குறித்து தெரிவித்தாவது, " ஒரு மருத்துவமனையில் இரண்டு வார காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட லேசானது முதல் மிதமான அறிகுறிகளை கொண்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் சளி தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டனர்" என்று கூறியுள்ளார். டாக்டர் நுனோ - கோன்சலஸ் மேலும் கூறுகையில், வாய்வழி குழி பெரும்பாலும் ஏதேனும் ஒரு வழியில் கொரோனா பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. எனவே தொற்று அபாயத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Corona virus, Covid-19

அடுத்த செய்தி