Home /News /lifestyle /

உலக எய்ட்ஸ் தினம் 2021 : ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறது - யுனிசெஃப்

உலக எய்ட்ஸ் தினம் 2021 : ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறது - யுனிசெஃப்

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம்

உலகளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5ல் 2 பேருக்கு அவர்களின் நிலை தெரியாது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 தொற்றுநோயை சமாளிக்க உலகம் போராடிக் கொண்டிருந்த நிலையில், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை புதிதாக எச்ஐவி நோயால் போராடியது என UNICEF கூறியுள்ளது. இது வருடத்தில் குறைந்தது 3,00,000 குழந்தைகள் என்று செவ்வாயன்று வெளியிட்ட புதிய UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குளோபல் ஸ்னாப்ஷாட், கடந்த ஆண்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டதாகவும் , 120,000 குழந்தைகள் இறந்ததாகக் காட்டுகிறது.

நீடிக்கும் கோவிட்-19 தொற்றுநோய், எச்.ஐ.வி தொற்றுநோயை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எய்ட்ஸ் நோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகளை பெற முடியாமல் போயுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் வறுமை, மனநலப் பிரச்சினைகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெண்களின் தொற்றுநோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன" என்று UNICEF தெரிவித்துள்ளது.

நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா ஃபோர் ஒரு அறிக்கையில் "இப்போது கோவிட்-19 ஆல் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தொற்றுநோயை சரி செய்யும் முயற்சியை கைவிட்டால் , எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் எய்ட்ஸுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் குழந்தைகள் என பல குழந்தைகளை இழக்க நேரிடும்" என்று ஃபோர் கூறியுள்ளார்.



உலகளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5ல் 2 பேருக்கு அவர்களின் நிலை தெரியாது. மேலும் எச்.ஐ.வி. உள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையி (ART) இருக்கின்றனர். ஏற்கெனவே எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் முறையாக அனைவருக்கும் சென்று சேராத நிலையில் கொரோனா நெருக்கடி அந்த இடைவெளியை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

இந்தியா மட்டுமன்றி 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கோவிட்-19 காரணமாக பல நாடுகளில் எச்ஐவி சேவைகள் முறையாக நடக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக வறுமை கொண்ட நாடுகளில் எச்ஐவி குழந்தை பரிசோதனை 50 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை துவக்கங்கள் 50லிருந்து 25 ஆக குறைந்துள்ளது. பல நாடுகளில் சுகாதார வசதிகள் விநியோகம், தாய்வழி எச்.ஐ.வி சோதனை மற்றும் ஆன்டிரெட்ரோவைரல் எச்.ஐ.வி சிகிச்சை ஆகியவற்றிலும் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் கர்ப்பிணிப் பெண்களிடையே ART கவரேஜ் 71 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜூன் 2020 இல் சோதனைகள் மீண்டும் அதிகரித்தாலும், பரிசோதனை அளவுகள் கோவிட்-19 க்கு முந்தையதை விட மிகக் குறைவாகவே உள்ளன. மேலும் இதன் தாக்கத்தின் உண்மையான அளவு தெரியவில்லை.



2020 ஆம் ஆண்டில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் புதிய எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 89 சதவீதமாகவும் , உலகளவில் எச்ஐவியுடன் வாழும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் 88 சதவீதம் பேர் என்றும் கண்டறிந்துள்ளது. அதில் ஆண்களை விட இளம்பெண்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகம் என்கிறது. எய்ட்ஸ் தொடர்பான குழந்தை இறப்புகளில் சுமார் 88 சதவீதம் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன.

2030ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க ஐநா சபையின் திட்டம் இதுதான்...

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்க்கு எதிரான போராட்டத்தில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கடந்த ஆண்டுகளில் அனைத்து பிராந்தியங்களிலும் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

குழந்தைகளுக்கான உலகளாவிய ART பரிசோதனையில் கர்ப்பிணிப்பெண்கள் (85 சதவீதம்) மற்றும் பெரியவர்கள் (74 சதவீதம்) ART சிகிச்சை பெறும் குழந்தைகளில் அதிக சதவீதம் தெற்காசியாவில் (95 சதவீதத்திற்கும் அதிகமானோர்), அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (77 சதவீதம்), கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் (59 சதவீதம்), கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா ( 57 சதவீதம்), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (51 சதவீதம்), மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா (36 சதவீதம்).



கடந்த ஆண்டு எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் சுமார் 15.4 மில்லியன் குழந்தைகள் பெற்றோரை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். எய்ட்ஸ் நோயினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உலகம் முழுவதும் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதமாக இருக்கின்றனர்.

”இனி வரும் நாட்களில் எய்ட்ஸ் பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே கணிசமான அளவை குறைக்க முடியும்” என ஹென்ரிட்டா ஃபோர் கூறுகிறார்.
Published by:Sivaranjani E
First published:

Tags: AIDS, HIV, WORLD AIDS DAY

அடுத்த செய்தி