• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 50 வகையான கேன்சர்களை முன்கூட்டியே காட்டும் ரத்தப் பரிசோதனை : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

50 வகையான கேன்சர்களை முன்கூட்டியே காட்டும் ரத்தப் பரிசோதனை : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

கேன்சர்களை முன்கூட்டியே காட்டும் ரத்தப் பரிசோதனை

கேன்சர்களை முன்கூட்டியே காட்டும் ரத்தப் பரிசோதனை

50 வகையான புற்றுநோய்களை கண்டறியும் "Revolutionary" என்ற டெஸ்டை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்பதற்கு சவாலாக இருக்கும் குடல் மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கூட இந்த சோதனைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்

  • Share this:
அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே 50 வகையான கேன்சர் நோய்களை கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை இங்கிலாந்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். இந்த நோயின் முதிர்ச்சி 4 கட்டங்களாக குறிப்பிடப்படுகிறது. 3வது மற்றும் 4வது நிலையை எட்டிவிட்டால், அது ஆபத்தான நிலையாக உருமாற்றம் அடைந்து, சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறது.

அந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்கான போதுமான மருத்துவ கட்டமைப்பு அனைத்து இடங்களிலும் இல்லை. மருத்துவ கட்டணமும் மிக மிக அதிகமாக இருக்கிறது. மேலும், ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவது என்பதும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த என்.ஹெச்.எஸ் (NHS) மருத்துவர்கள், ரத்தப் பரிசோதனை மூலம் தொடக்க நிலையிலேயே 50 வகையான புற்றுநோய்களை கண்டறியும் "Revolutionary" என்ற டெஸ்டை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்பதற்கு சவாலாக இருக்கும் குடல் மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கூட இந்த சோதனைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்.ஹெச். எஸ் -கேலரி (Galleri Process) புற்றுநோய் ஆராய்ச்சி, யுகே மற்றும் கிங்ஸ் கல்லூரியின் புற்றுநோய் தடுப்பு பிரிவு, சுகாதார நிறுவனம் கிரெய்லுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.



கேலரி பரிசோதனை (Galleri Process) :

உலகின் மிகப்பெரிய மருத்துவப் பரிசோதனையான கேலரி சோதனை 1,40,000 பேரிடம் நடத்தப்பட உள்ளது. இதில் கட்டி, டி.என்.ஏ துகள்கள் சேகரிக்கப்பட்டு, அதில் இருந்து நோய் ஏற்படுவதற்கு சாத்தியமான இடங்கள் கண்டறியப்பட உள்ளன. இதன் மூலம் ஆரம்ப கட்ட வளர்ச்சிகள் அறிந்து கொள்ளப்பட்டு, முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NHS தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் பேசும்போது, "புற்றுநோயை கண்டறிவது என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், இந்த பரிசோதனை நம்பிக்கைக்குரிய ஒன்றாக உள்ளது. கேலரி பரிசோதனை மூலம் நம்ப முடியாத வகையில் ரத்தத்தில் உள்ள மாதிரிகள் மூலம் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். இந்த பரிசோதனை வெற்றி, பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால், சிகிச்சையில் முறையாக அமல்படுத்துவதற்கான சரியான நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து பேசும்போது, "தலை, கழுத்து, குடல், நுரையீரல், கணையம் மற்றும் தொண்டைக் குழிகள் ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோயை, இந்த சோதனை முன்கூட்டியே கண்டறியும். இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 51.5 விழுக்காடு சரியான முடிவைக் கொடுத்துள்ளது. 0.5 விழுக்காடு மட்டுமே தவறான முடிவைக் காண்பித்துள்ளது. ஓசோஃபேஜியல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களை 66 விழுக்காடு முன்கூட்டியே கணிக்கும் இந்த சோதனை 89 விழுக்காடு உடலில் எங்கு கட்டிகள் உள்ளன என்பதை துல்லியமாக காட்டுகிறது" என தெரிவித்தார்.

எலும்புகளை பாதிக்கும் விட்டமின் டி குறைபாடு : தவிர்க்க உதவும் 5 உணவுகள்

இந்த சோதனை எவ்வாறு நடத்தப்படும்?

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. நோய் பின்புலம் மற்றும் பல்வேறு பின்னணிகளை உடைய 50 முதல் 77 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த சோதனைகளில் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் புற்றுநோய் கண்டறியப்படாதவர்கள் மட்டுமே இந்த சோதனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். சோதனையில் பங்கேற்கும் நபர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 முறை ரத்த மாதிரிகளை வழங்க வேண்டும்.



2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சோதனையை முழுமையான வடிவத்தை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள மருத்துவர்கள், ரத்த மாதிரி சோதனையில் பாசிடிவ் கிடைத்தவர்கள் மேற்கண்ட அடுத்த டெஸ்டுகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சோதனை முழு வெற்றியையும் நிறைவு செய்தால், 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் பேர் இந்த சோதனையை செய்து கொள்ள முடியும். புற்றுநோய் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ள ஒன்று அல்லது இரண்டு இடங்களை, ரெவல்யூஸ்னரி டெஸ்ட் காண்பிக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: