ஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..?

முக்கியமாக சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கம் கொண்டவர்கள் தினமும் சாப்பிட வேண்டும்.

news18
Updated: September 17, 2019, 11:13 PM IST
ஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..?
ஆப்பில்
news18
Updated: September 17, 2019, 11:13 PM IST
புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய்கள் வராமல் இருக்க தினமும் ஒரு ஆப்பிளும் டீயும் குடியுங்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு. அவை இரண்டிலும் அப்படி என்ன இருக்கிறது..?

ஃப்ளேவனாய்டு (flavonoid)என்ற ஊட்டச்சத்து இருப்பதே முக்கியக் காரணம். ஆம்.. ஃப்ளேவனாய்டு நிறைந்த உணவுகளை தினமும் உணவோடு சேர்த்துக்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய பாதிப்புகள் வராது என்கிறது ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை.

அதுமட்டுமன்றி ஃப்ளேவனாய்டு இரத்தக் குழாய்களின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு இரத்தக் குழாய்களின் பாதிப்பையும் சரி செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவிதமான நோய்களும் வராது எனவும் தெரிவிக்கின்றனர்.


தாவர வகைகளிலிருந்து கிடைக்கக் கூடிய ஃப்ளேவனாய்டு நிறைந்த உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு எந்தவித பாதிப்புகளும் வராது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் 53,048 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி 23 ஆண்டுகள் கண்கானித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் ஃப்ளேவனாய்டு தினமும் சாப்பிட வேண்டும். இதனால் புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்கலாம். இதனால் விரைவில் இறப்பை சந்திக்காமல் நீண்ட நாள் வாழலாம் என்கிறது.

இந்த ஃப்ளேவனாய்டு ஊட்டச்சத்தானது சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கம் கொண்டவர்களுக்கு மிகவும் முக்கியம் என்கிறது. ஏனெனில் அவர்களுக்குத்தான் விரைவில் இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு நோய்கள் வரும் என்கிறது. எனவே அதிகபட்சமாக எந்த உணவை உண்ணலாம் என தேடி அலைவதைக் காட்டிலும் தினமும் ஒரு ஆப்பிலும், ஹெர்பல் டீயும் குடித்து வந்தாலே போதும் என்கிறது ஆய்வு.

Loading...

இவை மட்டுமன்றி ஆரஞ்சு, 100 கிராம் ப்ளூபெர்ரி, 100கிராம் புரக்கோலி, ஆகியவற்றிலும் 500 மில்லி கிராம் ஃப்ளேவனாய்டு இருக்கின்றன.

பார்க்க :

நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது? அதனைப் போக்குவது எப்படி?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...