கொரோனா என்கிற வார்த்தையை கேட்டாலே ஒருவித பயம் கொள்ளும் வகையில் இது மக்களை ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பினால் பலர் இறந்து போனார்கள் மற்றும் பலர் இப்போது வரையிலும் அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்டா என்கிற கொரோனா வைரஸ் திரிபு வகை உருவானது. இது பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போன்று தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் வகை உருவாகி மக்களை வாட்டி வருகிறது.
இந்த வைரஸின் பரவல் அதி தீவிரமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக கொரோனா மூன்றாம் அலை தொடங்கி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸில் இருந்து மற்றுமொரு வைரஸ் வகை உருவாகி உள்ளது. இது மேலும் வீரியமாக உள்ளது என மருத்துவர்கள் அறிந்துள்ளனர். இதை ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.2 (Omicron subvariant BA.2) என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். டென்மார்க்கை சேர்ந்த பலருக்கு இந்த வகை வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
இது ஓமைக்ரான் வகையை விட மிக வேகமாக பரவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது எந்த அளவிற்கு எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தாக்கும் என்பதை பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டென்மார்க்கில் அதிகம் இந்த புது ஓமைக்ரான் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டு கொள்ளாதவர்களே. இவர்களுக்கு ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.2 (Omicron subvariant BA.2) பரவல் மிக வேகமாக பரவி வருகிறது.
இது ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.1 (Omicron subvariant BA.2) வகையை விடவும் இரு மடங்கு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டென்மார்க்கில் இந்த புது வகை ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக சோதித்து பார்த்து வந்தனர்.
இதன் மூலம் இவர்களுக்கு இந்த ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.1 வகையை விடவும் ஓமைக்ரான் சப்வேரியன்ட் BA.2 (Omicron subvariant BA.2) வகை வைரஸ் [பாதிப்பு தான் அதிகம் இருப்பதாக கண்டறிந்து உள்ளனர்.
இனி வரும் வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த வகை பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விரைவில் போட்டு கொள்வது சிறந்தது. அதே போன்று வெளியில் அவசியம் செல்ல வேண்டாம். அப்படியே சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.
முக்கியமாக கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளை கொண்டவர்கள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அதே போன்று ஊரடங்கு விதிமுறைகளையும் அவசியம் கடைபிடிப்பது நல்லது.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.