• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய் : அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கு..?

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய் : அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கு..?

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

தற்போது, சமையல் எண்ணெயைப் பொறுத்தவரை, பலர் பிற எண்ணெய் வகையை காட்டிலும் ஆலிவ் எண்ணெயை உபயோகிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

  • Share this:
வேலை, குடும்பம், எதிர்காலம் என வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதும் கவலையடைந்து வருகின்றனர். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் அடிக்கடி தங்கள் உணவு, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.

பச்சை காய்கறிகள், பயிறு வகைகள் என பலர் தங்கள் டயட்டில் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை சேர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், எண்ணெய் வகை உணவுகளை சாப்பிவதில் பெரிதும் நாட்டம் காட்டுவதில்லை. எண்ணெய் உணவு, ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக அடிப்படை சுகாதார நிலைமை உள்ளவர்களுக்கும், உடல் ரீதியாக அதிக சுறுசுறுப்பாக இல்லாதவர்களுக்கும். தற்போது, சமையல் எண்ணெயைப் பொறுத்தவரை, பலர் பிற எண்ணெய் வகையை காட்டிலும் ஆலிவ் எண்ணெயை உபயோகிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். ஆலிவ் எண்ணெய் உண்மையில் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குமா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இது தொடர்பாக, மோடி நேச்சுரல்ஸ் லிமிடெட்டின் கூட்டு நிர்வாக இயக்குநர் அக்ஷய் மோடி என்பவர் கூறியதாவது, மத்தியதரைக் கடல் உணவின் ஒரு பகுதியான ஆலிவ் எண்ணெய், உலகின் ஆரோக்கியமான மக்களில் சிலருக்கு உணவுப் பொருளாக உள்ளது என்று விளக்கினார். மேலும், "ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள், மேம்பட்ட கண்பார்வை மற்றும் தோல் நன்மைகள் போன்ற சில சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.



இந்திய உணவு பல்வேறு வகையான பிராந்திய மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை உள்ளடக்கியது மற்றும் அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று கணிசமாக வேறுபடுகின்றன. ஆனால் அனைத்து வகையான இந்திய சமையலுக்கும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் நடுநிலை சுவை கொண்ட ஒரு லேசான எண்ணெய் ஆகும். இது மற்ற சமையல் எண்ணெய்களை விட ஆரோக்கியமானது மற்றும் சுவையானது மற்றும் அதிக வெப்பநிலையில் நிலையான ஒன்றாக செயல்படுகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், இது உணவில் குறைவாக உறிஞ்சப்படுவதால், ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான சமையலுக்கு சிறந்தது. அதே நேரத்தில் மலிவு விலையில் கிடைக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

மழைக்காலத்தில் காய்கறிகள், பழங்களை புழு பூச்சி இல்லாமல் எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? சேமித்து வைக்கவும் டிப்ஸ்

அதேபோல, எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்பது "0.3 சதவீத அமிலத்தன்மைக்குக் கீழே குளிர் அழுத்தப்பட்ட ஆலிவ் எண்ணெய்" என்றும் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த எண்ணெய் லேசான நறுமணத்தைக் கொண்டிருக்கும். இது சாலடுகள், பாஸ்தாக்கள், அரிசி, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். இந்த எண்ணெய் சூடாக்கப்படாமல் அப்படியே உட்கொள்ளப்பட வேண்டும். இவை ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படும். இருப்பினும், இது இந்திய உயர் வெப்பநிலை சமையலுக்கு ஏற்றதாக இருக்காது.



ஆலிவ் எண்ணெய் ஒரு பல்நோக்கு எண்ணெய் ஆகும். இது முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், உலர்ந்த செதில்களாக இருக்கும் சருமத்தை புத்துயிர் பெறச் செய்யவும் உபயோகப்படுத்தலாம். இதில் பாலிஃபீனால்களின் அதிக உள்ளடக்கம் உள்ளது. இது உட்புற செல்களை குணப்படுத்த உதவுகிறது. இது தோலின் வெளிப்புற அடுக்கை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தும்போது, ​​ஆலிவ் எண்ணெய் நுண்ணறைகளுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

அதேபோல, நல்ல கொழுப்புகளான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் உள்ளன. இவை இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன. இது எலும்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவை மிதமான அளவில் உள்ளது. இத்தகைய எண்ணெய்யை நாம் அன்றாடம் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: