கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தாயின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது அவசியம். கருத்தரிக்க முயற்சிக்கும் போது அல்லது கர்ப்பமாக இருக்கும் போது பல காரணிகளை பரிசோதித்து உடல் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
கருத்தரிப்புக்கான தேவைகளில் முக்கியமான ஒன்று தாய் ஆரோக்கியமாக இருப்பது என்னும் நிலையில் அதிக எடை அல்லது உடல் பருமன் சிக்கல் கருவுறுதல், கர்ப்பகாலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கான நிகழ்தகவை எதிர்மறையாக பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், பெண்கள் ஆரோக்கியமான எடையை பேணுவது அவர்கள் எளிதாக கருத்தரிக்க பெரிதும் உதவும். உடல் பருமன் பல நோய்களுக்கு மூல காரணமாக இருக்கிறது. கருத்தரிப்பது முதல் பிரசவம் வரை பல வழிகளில் கர்ப்ப செயல்முறையை பாதிக்கிறது. சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
30-க்கு மேல் BMI உள்ள பெண் உடல் பருமன் கொண்டவராக கருதப்படுகிறார். கருவுறுதல் மற்றும் கர்ப்ப காலம் உள்ளிட்டவையை உடல் பருமன் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.
உடல் பருமனால் கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் அல்லது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்...
- உடல் பருமன் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) சிக்கலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கருவுறுதல் விகிதம் அல்லது மலட்டுத்தன்மைக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.
- தாயின் அதிக உடல் எடை சில சந்தர்ப்பங்களில் பிரசவ அபாயத்தை அதிகரிக்கும் மேலும் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தாகவும் அமைகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இறந்தே பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் பின்னணியில் தாய்மார்கள் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- உடல்பருமன் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதே போல சுவாச நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து பருமனான கர்ப்பிணிகளுக்கு உள்ளது.
இறுக்கமான ஆடைகள் கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? ஜீன்ஸ் பேண்ட் அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?
- எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதிக்கு 2-3 வாரங்களுக்கு முன்னரே குழந்தையை பிரசவிப்பது குழந்தை சரியாக வளர்ச்சியடைய தேவையான நேரத்தை குறைக்க கூடும். உடல் பருமன் கொண்ட தாய்க்கு முன்கூட்டிய பிரசவங்களை எதிர்கொள்ள நேரிடும்.
- கர்ப்பகால நீரிழிவுக்கான அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் உடல் பருமனும் ஒன்று.
- உடல் பருமனான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிறக்கும் போதே நாள்பட்ட நோய்களுக்கு ஆளாவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உடல்பருமனான தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் நீரிழிவு, இருதய நோய்கள் போன்ற அபாயங்களுக்கு ஆளாகிறார்கள்.
- கர்ப்ப காலத்தில் அதிக பிஎம்ஐ-யுடன் இருப்பது கருச்சிதைவு, பிரசவத்தில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் பருமன் கொண்ட கர்ப்பிணிகளுக்கு மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படலாம்.
- உடல் பருமன் கொண்ட தாய்மார்கள் சராசரி குழந்தைகளை விட பெரிய சைஸ் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலை மேக்ரோசோமியா என்று குறிப்பிடப்படுகிறது.
- கர்ப்ப காலத்தில் உடல் பருமன் ஒருவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை பாதிக்க செய்யலாம்.
Read More: உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிட்டதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
உடல் பருமன் உள்ள கர்ப்பிணிகள் தங்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி தினமும் வொர்கவுட் செய்ய வேண்டும், சீரான டயட்டை கடைபிடிக்க வேண்டும். நிறைய ஓய்வு மற்றும் மனஅமைதி முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.