Home /News /lifestyle /

அடிக்கடி மனப்பதட்டம் ஏற்படுகிறதா..? ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைகள்..!

அடிக்கடி மனப்பதட்டம் ஏற்படுகிறதா..? ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைகள்..!

மனப்பதட்டம்

மனப்பதட்டம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வழங்கும் நன்மைகளும் பலன்களும் பலரும் அறியாதவை. இவை உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலால், ஒரு சில காரணங்களால் அதீதமான பதட்டம் ஏற்படும். பயம், அதிக கவலை, குழப்பமான மனநிலை, அசவுகரியமாக உணர்வது ஆகியவை தொடர்ந்து ஏற்பட்டு வந்தால் மனப்பதட்டம் உண்டாகும். ‌‌ மன அழுத்தத்தின் வெளிப்படையாக தான் மனப்பதத்தட்டை உணர்வீர்கள். ஆனால் மன அழுத்தம் ஸ்ட்ரெஸ் இல்லாமல் கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனப்பதட்டம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் பதட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மனப்பதட்டம் என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒரு சூழலை கையாள முடியாமல் இருக்கும் ஒரு நிலை அல்ல. இது ஒரு உடல் ரீதியான பாதிப்பின் வெளிப்பாடு. மனப்பதட்டம் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களால் உண்டாகிறது. ஏதேனும் ஒரு சூழலை உங்களால் கையாள முடியாமல் இருந்தால், அச்சத்தால், எதிர்பாராத இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் மற்றும் மனதின் வெளிப்பாடு தான் பதட்டம்.

மனப்பதட்டம் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக காணப்படும். குறிப்பிட்ட உணவு பழக்க வழக்கம் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதித்து, அதீதமான பதட்டத்தை உண்டாக்கும். கைகள் நடுங்குவது, அதிகப்படியான வியர்வை, தடுமாறுவது, யாருடைய கண்களுக்கும் படாமல் தனித்திருக்க வேண்டும், உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக காணப்படும். பதட்டம் அடிக்கடி ஏற்படும் பொழுது சரியான சிகிச்சை தேவைப்படும். அதே போல உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு பழக்கத்தையும்.

மூளை ஆரோக்கியத்தை பாதுக்காக்க, மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவு மேற்கொண்டால் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணரான லவ்நீட் பத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்துள்ளார். மன பதட்டத்தை குறைத்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்.



ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் :

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வழங்கும் நன்மைகளும் பலன்களும் பலரும் அறியாதவை. இவை உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான கொழுப்பு அமிலம் ஒமேகா-3 நிறைந்த உணவுகளில் உள்ளது. இவை பதட்டத்தை மிகவும் எளிதாக நீக்கிவிடும்‌. கடல் உணவுகளில் மற்றும் மீன் வகைகளில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது. அதேபோல் சைவ உணவுகளில் கிட்னி பீன்ஸ், வால்நட் விதைகள், சியா விதைகள் மற்றும் நெய் ஆகியவற்றில் ஒமேகா-3 நிறைந்துள்ளது.

தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

 

ட்ரிப்டோபான் நிறைந்த உணவுகள் :

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் நமக்கே தெரியாத ஆனால் ஆற்றல் மிக்க பல ஆரோக்கியமான காம்பவுண்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ட்ரிப்டோபான். இஹு ப்ரோபயாடிக் வகையைச் சார்ந்தது. உங்களுடைய உணவு குழாயில் மற்றும் குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா டிரிப்டோபானில் உள்ளது. வீட்டில் உறை வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தயிரில் இந்த சத்து நிறைந்துள்ளது. இந்த ப்ரோபயாட்டிக் ஆபத்தான நுண்கிருமிகளை அழிப்பதற்கு உதவுகிறது.

வயிறு ஆரோக்கியமாக செரிமான பிரச்சனை ஏதும் இல்லாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாகவும் மூளை புத்துணர்வுடனும் இருக்கும். வயிறு பிரச்சினை இருந்தால், மூளை மந்தமாக இருக்கும். எனவே இயற்கையான பாக்டீரியா நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை குறையும்.



மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் :

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டுமே அதிகமாக மிகவும் இன்றிமையாத மினரல்கள். இவை இரண்டுமே எலக்ட்ரோலைட் பேலன்ஸ், எலும்பு, மூளையின் செயல்பாடு ஆகியவற்றில் நிர்வகிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வாழைப்பழம் மற்றும் பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் கொஞ்சம் சூரிய ஒளி :

வைட்டமின் டி சருமம், எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. எந்த செலவும் இல்லாமல் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் சத்து வைட்டமின் டி. தினமும் கொஞ்ச நேரம் சூரிய ஒளி உடலில் படும் வகையில் நேரத்தை ஒதுக்கினால், உங்களுக்கு உடல் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உடலே உருவாக்கிக் கொள்ளும்.

மூளை செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் anti-inflammatory பண்புகள் கொண்ட உணவுகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.இவை உள் உறுப்புகளில் அழற்சி எனப்படும் பாதிப்பை தடுத்து, நரம்புகள் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து உங்கள் மனநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Anxiety, Stress

அடுத்த செய்தி