எடை இழப்பு என்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கிறது. எடை குறைப்பு பயணத்தில் இருக்கும் பலரும் பலவித முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு தங்களது இலக்குகளை அடைய பாடுபட்டு வருகின்றனர். உங்கள் அல்டிமேட் ஃபிட்னஸ் கோல் என்பது எடையை குறைப்பதாக இருந்தாலும் எடை இழப்பு இலக்குகளை தனித்தனியாக அடைய முடியாது. அதிகப்படியான எடையை குறைக்க ஒர்கவுட்ஸ்களை அதிகரிப்பது, ஆரோக்கிய உணவுகளை டயட்டில் சேர்ப்பது என பலவழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். எனினும் பலர் அவர்களது எடை குறைக்கும் முயற்சியை துவக்கும் போது செய்யும் சில தவறுகள் எதிர்பார்க்கும் முடிவுகளை கொடுக்காது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும்.
இந்நிலையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் எடை இழப்பு வழக்கத்தை பின்பற்றும் போது பலரும் பொதுவாக செய்யும் முக்கிய மூன்று தவறுகளை பற்றி குறிப்பிட்டு ஒரு போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார். ருஜுதா திவேகர் பகிர்ந்துள்ள 3 எடை இழப்பு தவறுகள் இங்கே:
View this post on Instagram
சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக கூறுவது:
ருஜுதா திவேகரின் கூற்றுப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்க அல்லது ஒர்கவுட்ஸ்களை மேற்கொள்ள சரியான நாள் அல்லது நேரம் பார்ப்பது பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமானது என்கிறார். குறிப்பாக இன்னும் சில வாரங்களில் 2023-ஆம் ஆண்டு துவங்க உள்ளதால் நியூஇயர் ரெசல்யூஷனாக எடை குறைப்பு முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று பலரும் காத்திருக்கிறார்கள். சரியான உணவுகளை சாப்பிட மற்றும் ஒர்கவுட்ஸ்களை செய்ய 2023-ஆம் ஆண்டு துவங்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதில்லை. எடை இழப்பு செயல்பாடுகளை முன்கூட்டியே துவங்குவது உங்களது முயற்சியை விரைவுபடுத்த உதவும் என்கிறார்.
நம்பர் அடிப்படையிலான எடை இழப்பு:
எடை இழப்பு என்பது நம்பர்களை பற்றியது அல்ல என்பதை தனது சமீபத்திய போஸ்ட்டில் ருஜுதா சுட்டிக்காட்டி உள்ளார். சிலர் உடல் எடையை குறைப்பதை ஒரு நம்பர் கேமாக மாற்றிவிடுகிறார்கள். ஆரோக்கியம் என்பது நம்பர்களை பற்றியது அல்ல என்று கூறி இருக்கிறார். குறிப்பிட்ட நம்பர் எடையை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக தூக்கம், பசி மற்றும் மகிழ்ச்சியை இழப்பது சரியான வழிமுறையாக இருக்காது. எடையை குறைத்தும் நீங்கள் வெற்றிபெறவில்லை என்ற சூழலை தான் இது ஏற்படுத்தும். ஏனென்றால் உடல் எடையை குறைக்கும் போதும் கூட ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் போது ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, வெயிட் மெஷினில் தோன்றும் நம்பர்களை பற்றி கவலைப்படாமல் இருப்பதும் முக்கியம்.
Also Read : உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
நிலையான டயட் பிளான்ஸ்:
எடை குறைப்பில் குறிப்பிட்ட சில டயட் அல்லது பாப் மாத்திரைகளுக்கு (pop pills) எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு "லைஃப் ஸ்டைல்" என்று விளம்பரப்படுத்தப்படும் டயட்டை பின்பற்றுவதற்கு ஆப்ஸ் டவுன்லோட் ப்ராடக்ட்ஸ் அல்லது மாத்திரைகள் தேவைப்படுகிறது. நீடித்து நிலைக்க முடியாத இத்தகைய மோகங்களிலிருந்து விலகி இருப்பது முக்கியம். லைஃப் ஸ்டைல் என்பது நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும் தூக்க சுகாதாரம், வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை குறித்து கொண்டு வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் டயட்டில் சேர்ப்பது உள்ளிட்ட பல விஷயங்களை அடக்கியது என கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Weight loss, Workout