சிறுநீரக கற்கள் பிரச்சனை தீர்வுக்கும் உதவும் எலுமிச்சம் பழம்..

சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எலுமிச்சை பழம்

முறையாக எலுமிச்சை சாறை குடித்து வருபவர்களின் சிறுநீரக கற்கள் 1.00 - லிருந்து 0.13 ஆக குறைத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
எந்தவொரு உடல் உபாதைகளையும் அல்லது நோய்களையும் முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், பின்நாட்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப சில வியாதிகள் வாழ்வியல் நோய்களாக மாறி வருகின்றன. அவற்றுள் உடல் பருமன், கிட்னி கற்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன. வீட்டில் இருக்கும் பொருட்களின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டாலே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வுகளை காணலாம்.

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகின்றன?

கிட்னி கற்களை பற்றி இன்றைய சூழலில் அறியாதவர்கள் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். அந்தளவுக்கு கிட்னி கற்கள் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். கிட்னியில் உருவாகும் கற்கள், நம் வாய் வழியாக சென்று அங்கு தங்குவதில்லை. அவை கிட்னியிலேயே உருவாவது ஆகும். தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் நாள் கணக்கில் சேர்ந்து கற்களாக உருவாகின்றன. சிறுநீரக கற்கள் குணப்படுத்தக்கூடியது என்றாலும், சரியான கவனிப்பு இல்லாவிட்டால் அவை அளவில் பெரிதாகி அறுவை சிகிச்சை நிலை மூலம் அகற்ற வேண்டிய நிலைக்கு கொண்டுசேர்க்கும். ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் சரியான வாழ்க்கை முறை, இயற்கை வழி உணவுகள் மூலமும் கட்டுப்படுத்திவிடலாம்.

சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எலுமிச்சை பழம்


சிறுநீரக கற்களின் அறிகுகுறிகள்

குமட்டலுடன் கூடிய கடுமையான வயிற்று வலி, வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல், சிறுநீரில் ரத்தம், முதுகுவலி, காய்ச்சல் ஆகியவை சிறுநீரக கற்களின் அறிகுறிகளாகும்

சிறுநீரக கல் பிரச்சனை நீங்க செய்ய வேண்டியவை :

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் முறையாக தண்ணீர் அருந்துவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹைடிரேட்டிங் (hydrating) எனப்படும் நீரேற்றம் உடலில் சரியாக இருந்தால் சிறிய கற்கள் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும். மேலும், உடலுக்கு தேவையான ஹைடிரேடிங் சரியாக இருப்பின் சிறுநீரக கற்கள் பெரிதாக மாறுவதையும் தடுக்க முடியும். தொடர்ந்து நீர் அருந்துவது உங்களுக்கு மிகவும் சலிப்பாக இருந்தால் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளலாம்.

டி.கே பப்ளிஷிங் வெளியிட்ட 'Healing Foods' என்ற புத்தகத்தில், எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என கூறப்படுள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான சிட்ரிக் அமிலம் படிகங்களால் கற்கள் உருவாவதை தடுக்கிறது. எலுமிச்சை பழச்சாறு அல்லது இனிப்பு அல்லாத எலுமிச்சை சாறு ஆகியவற்றை நாள்தோறும் எடுத்துவந்தால் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மூத்த டையட்டீசியன் ஜோதி பாட்டும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எலுமிச்சை பழம்


சிறிய அளவிலான சிறுநீரக கற்களையும் எலுமிச்சை சாறு அகற்றும் என அவர் தெரிவித்துள்ளார். முறையாக எலுமிச்சை சாறை குடித்து வருபவர்களின் சிறுநீரக கற்கள் 1.00 - லிருந்து 0.13 ஆக குறைத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரஷ்ஷாக தயாரித்த எலுமிச்சை சாற்றை குடிக்கும்போது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும் என்றும், எடைக் குறைப்பை துரிதப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மெட்டபாலிச செயல்பாட்டை வேகப்படுத்தும் சக்தி எலுமிச்சை சாற்றில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பயிறு மற்றும் பருப்பு வகை உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழச்சாறு, ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவையும் சிறுநீரக கற்களை கட்டுப்படுத்துகின்றன.
Published by:Arun
First published: