ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடலுறவில் விருப்பம் இல்லை, குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆர்வம்... என்ன செய்வது? மருத்துவர் விளக்கம்!

உடலுறவில் விருப்பம் இல்லை, குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆர்வம்... என்ன செய்வது? மருத்துவர் விளக்கம்!

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் : குழந்தை நிற்காததற்கு வேலைப்பளு, வித்தியாசமான வேலை நேரம்,தூக்கமின்மை, அதனால் உண்டாகும் மன அழுத்தம் இவை எல்லாமே காரணமாக இருக்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ராகுலும் சுஜிதாவும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியர். திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. கொரோனா காலத்தில் துவங்கி இப்போது வரை வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். இருவரும் வெவ்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்காக பணிபுரிவதால் வேலை நேரம் அதற்கு ஏற்றார் போல மாறும் . முழு அடைப்பு காலத்தில் இருவருமே 10 கிலோ எடை அதிகரித்து 84 கிலோ எடை இருந்தனர். அவர்களுடைய பிரச்சனை என்ன?

திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆனதால் இரு குடும்பத்தாரும் குழந்தையை எதிர்பார்க்கின்றனர். அதற்காகத்தான் இருவரும் என்னை சந்திக்க வந்திருந்தனர் ‌.இருவரிடமும் பொதுவான உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தேன். நல்ல பெற்றோர், வசதியான குடும்பம், இருவருக்கும் நல்ல வேலை, மனப்பொருத்தம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு எந்த குறைவுமில்லை என்பதை புரிந்து கொண்டேன்..

திருமணமான ஒன்றரை வருடங்களில் எத்தனை மாதங்களாக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்? என்று கேட்டேன். . கேட்டதில் , ஒரு மாதம் தான் நாங்கள் முயற்சி செய்தோம் என்று கூறினர். குழந்தை சிறிது காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தீர்களா? என்று கேட்டேன். "

சிறிது தயக்கத்துடன் , எங்கள் இருவருக்குமே உடல் உறவில் விருப்பம் இல்லை. எங்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை இதுதான் டாக்டர்!! அத்துடன் வேலை வேறு நேரம் வேறு அவருக்கு காலை நான்கு மணியிலிருந்து 12 மணி வரை வேலை நேரம் எனக்கு மதியத்தில் இருந்து இரவு வரை வேலை நேரம்.

அதனால் இரண்டு பேரில் யாராவது ஒருவர் சோர்வாக இருக்கிறோம் அத்துடன் இயல்பாகவே எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏன்? என்று தெரியவில்லை, எங்களைப் போல தான் மற்ற தம்பதிகள் இருக்கின்றனரா? இல்லை, இது போன்ற எண்ணங்கள் எங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறதா..?

அதனால் தான் உங்களிடம் சிகிச்சை எடுக்க முடிவு செய்தோம்.

கருமுட்டை வரும் நேரத்தை நீங்கள் ஸ்கேன் செய்து கூறினால் நாங்கள் அந்த சில நாட்கள் மட்டும் , உறவு வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறோம்" என்றனர்.

பெண்குயின் கார்னர் : ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

28-26 வயது தான் இருவருக்கும். ஆனால் உடல் எடை கூடியதால், பார்க்கும்போது 35 வயது கடந்தவர்கள் போல தோற்றமளிக்கின்றனர். அத்துடன் வேலைப்பளு, வித்தியாசமான வேலை நேரம்,தூக்கமின்மை, அதனால் உண்டாகும் மன அழுத்தம் இவை எல்லாமே காரணமாக இருக்கலாம். மாய மானை துரத்தி கொண்டு ஓடுவது போல இந்த கால இளம் தம்பதியர் வாழ்க்கையை விட்டுவிட்டு வசதியை தேடி கொண்டு ஓடுகிறார்களா? அல்லது வெளிநாட்டு கம்பெனிகள் இவர்கள் நாடித்துடிப்பை சரியாக கணித்து பணத்தை வீசி எறிந்து இவர்கள் இளமையை தியாகம் செய்ய வைக்கிறதா? சிந்திக்க வேண்டிய விஷயம்.

மீண்டும் ராகுல் சுஜிதா தம்பதிக்கு வருவோம்.

இருவருக்கும் சில அடிப்படை பரிசோதனைகள் ஏற்கனவே எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அது எல்லாவற்றையும் பார்த்ததில் இன்றும் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை .

சுஜிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை ,முட்டைப்பை நன்றாகவே இருந்தது. அதுபோலவே ராகுலுக்கும் விந்தணு பரிசோதனை செய்ததில் சராசரியாக இருந்தது.

இருவரும் அன்றிருந்த மனநிலையில் , "எங்களுக்கு ஸ்கேன் செய்து கருமுட்டை வரும் நேரத்தை சரியாக கணித்து சொல்லுங்கள். இதுதான் நாங்கள் உங்களிடத்தில் கேட்கும் உதவி. வேறு எந்தவிதமான சிகிச்சையின் வேண்டாம்." என்றுதான் இருந்தது.

பெண்குயின் கார்னர் : உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தா..? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

பிறகு இரண்டு மூன்று முறை அவர்கள் வந்ததன் பின்னர் ,மெதுவாக நான் சொல்வதை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தனர்." பாலியல் குறித்த திறமையான மனநல ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களை சந்தித்தால் உங்களுடைய பிரச்சினை எளிதாக தீரும்" என்று கூறினேன். இருவருமே சம்மதித்தனர்.

இரண்டு மூன்று முறை ஆலோசகரை சந்தித்து வந்தனர். இதற்கு மத்தியில் இருவருக்கும் எடை குறைப்புக்கான சிகிச்சையையும் தொடங்கினோம். அத்துடன் இருவரும் வேலை நேரத்தை ஒரே சமயத்தில் மாற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினேன். ஒரு வாரம் குறைந்தபட்சம் விடுப்பு எடுத்துக் கொண்டு இருவரும் நல்ல ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினேன்.

பெண்குயின் கார்னர் : உடலுறவுக்கு பின் பிறப்புறுப்பில் எரிச்சல்... ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை என மருத்துவர் விளக்கம்

மூன்று நான்கு மாத சிகிச்சையில் இருவருமே 4 கிலோ வரை எடை குறைந்து இருந்தனர். அதைவிட முக்கியமாக இருவருமே புத்துணர்வோடு இருந்தனர். மேலும் பலரும் குழந்தை வேண்டும் என்று சிகிச்சைக்கு வரும்போது கருமுட்டை வரும் காலத்தில் மட்டும் உறவு வைத்துக் கொண்டால் போதும் என்று நினைக்கின்றனர். அவ்வாறு அல்லாது மற்ற நாட்களில் இயல்பாக இருக்கவும், அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ உறவு கொள்வது மற்றும், கருமுட்டை வரும் காலத்தில் கட்டாயமாக உறவு கொள்வதையும் ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே கர்ப்பத்திற்கான சாத்தியம் அதிகமாகும். தேவை இல்லாத கூடுதலான மன அழுத்தத்தை இது தவிர்க்கும்.

இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் சுஜிதா கருவுறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Sex, பெண்குயின் கார்னர்