இரவில் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்குவது ஒவ்வொரு நபருக்கும் முக்கியமானது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அமைதியான தூக்கம் சோர்வான உடலை சரிசெய்யவும், மற்றொரு நாளை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தவும் உதவுகிறது. இரவில் தூங்குவது கடினம் என்று நினைக்கும் பெரும்பாலானோர் அடுத்த நாள் சோர்வாகவே இருக்கின்றனர். உண்மை என்னவென்றால், சிறந்த தூக்க நேரம் என்பது சிலருக்கு எட்டு மணிநேரமாகவும், சிலருக்கு ஆறு மணி நேரம் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
ஒரு நபருக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
இந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை. இது நபருக்கு நபர் மாறுபடும். உங்கள் தூக்க முறைகள் மற்றும் தூக்கக் கோளாறுகள பரம்பரையை தொடர்புடையது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இது அனைத்தும் உங்கள் டி.என்.ஏ-வை பொறுத்து மாறுபடும். ஆறு மணி நேரம் தூங்கலாம், அல்லது சுறுசுறுப்பாக உணர ஒன்பது மணி நேரம் கூட ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.
மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் சுழற்சிக்கு முன்னும் பின்னும் ஒரு பெண்ணின் உடல் நிறைய மாற்றங்களைச் சந்திக்கிறது. குறிப்பாக மார்பகங்களில் வலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு. இந்த நேரத்தில் பெரும்பாலும் தூங்குவது கடினம். இத்தகைய காலகட்டத்தில் பெண்கள் இயல்பு நிலைக்கு வர இயல்பை விட அதிக நேரம் தூக்கம் தேவைப்படலாம்.
தூக்கமின்மையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? ஆழ்ந்த தூக்கத்திற்கான இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
காலநிலை மாற்றங்கள்
வெளிப்புற சூழல் மற்றும் வெப்பநிலை உங்கள் தூக்க நேரங்களை மாற்றக்கூடும். சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய நேரத்தின் மாற்றம் மெலடோனின் அளவையும் நீங்கள் தூக்கத்தை உணரத் தொடங்கும் நேரத்தையும் பாதிக்கிறது. இதனால் காலநிலை மாற்றங்களை பொறுத்து உங்கள் தூக்க நேரம் வித்தியாசப்படும். உங்கள் பகுதியில் சீக்கிரமாக சூரியன் உதயமானால் உங்கள் காலைதூக்கம் பாதிக்கும். குளிர்காலத்தில் இரவுகள் நீளமாக இருக்கும், மேலும் நாள் முழுவதும் சூரிய ஒளியை குறைவாகப் பெறுகிறோம்,எனவே குளிர்காலத்தில் அதிக நேரம் தூங்குகிறோம்.
சுகாதார பிரச்சினைகள்
நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது குறைந்த ஓய்வு தேவை. எனவே நமது தூக்கம் மற்றும் எழுந்திருக்கும் நேரம் அதற்கேற்ப தானாக மாறுகிறது. நல்ல தூக்கம் நோய்களில் இருந்து குணமடைய உதவுகிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது அதிகமாக தூங்குவது அவசியம். உண்மையில், அதிகப்படியான தூக்கம் ஒரு அடிப்படை சுகாதார நிலைக்கான அறிகுறியாகஇருக்கலாம்.
சரியான தூக்க நேரத்தை எவ்வாறு தீர்மானிப்பது
நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான வாழ்க்கை முறைகளை வாழ்கிறோம். நமது அன்றாட பழக்கவழக்கம், உடற்பயிற்சி, உடல்நலம், வேலை ஒருவொருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. எனவே, உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதை தீர்மானிப்பது நீங்களே. நீங்கள் எழுந்திருக்கும்போது எப்படி உணருகிறீர்கள் என்பது உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதை தீர்மானிக்க சிறந்த வழியாகும். ஆறு மணி நேரம் தூங்கிய பிறகு நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்ந்தால் அது ஒரு நல்ல அறிகுறி, இல்லையெனில் நீங்கள் தூங்கும் நேரத்தை அதிகரிக்கவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sleep