Home /News /lifestyle /

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்... இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்..!

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்... இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்..!

நோரோ வைரஸ்

நோரோ வைரஸ்

நோரா வைரஸ் என்பது நமக்கு சாதாரணமாக சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிடையாது. மருத்துவர் அமர் இதைப் பற்றி கூறுகையில் அவ்வப்பொழுது நோரோ வைரஸ் தொற்று பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பாதித்த கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதுப்புது வைரஸ்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நோரோ வைரஸ் என்ற ஒரு புது வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நோரோ வைரஸிற்கு ஏற்கனவே கேரளாவில் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த வைரஸால் ஏற்படும் ஆபத்து, இதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நோரோ வைரஸ் பாதிப்பு

மாநில சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள அறிக்கைகளின்படி திருவனந்தபுரத்தில் இரண்டு குழந்தைகள் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோரோ வைரஸ் என்பது வயிறு சம்மந்தமான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய எளிதில் பரவும் தன்மை கொண்ட வைரஸ்.

தற்போது குழந்தைகளை பாதித்து இருக்கும் நோரோவைரஸ் அவர்கள் சாப்பிட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அதன் வழியாக மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல குழந்தைகளின் சாம்பில்களையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். நோரோ வைரஸ் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா மற்றும் நோரோ வைரஸ் பற்றி அனைவரு ம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி தொற்றுநோய் நிபுணர் மற்றும் கோவிட்-19, எச்1என்1 மற்றும் ஜிகா போன்ற தொற்று நோய்களுக்கான கேரள மாநில நோடல் அதிகாரியான டாக்டர் அமர் ஃபெட்டில் பகிர்ந்துள்ளார்.



நோரோ வைரஸ் எவ்வளவு ஆபத்தானது

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் கூற்றுப்படி நோரோ வைரஸ் என்பது வின்டர் வாமிட்டிங் வைரஸ் என்று கூறப்படுகிறது. இது மிகவும் எளிதாக மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். நோரோ வைரஸ் என்பது ஃபுட் பாய்சன், வயிற்றில் பூச்சி அல்லது ஃப்ளூ என்று வேறு சில பெயரிலும் கூறப்படுகிறது. நோரா வைரஸ் என்பது நமக்கு சாதாரணமாக சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிடையாது. மருத்துவர் அமர் இதைப் பற்றி கூறுகையில் அவ்வப்பொழுது நோரோ வைரஸ் தொற்று பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் இதை பற்றி பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி சென்றுவிட்டதா..? இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

அவ்வப்போது பலவிதமான வைரஸ்கள் உருவாகி மக்களிடையே பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் தொற்று பாதிப்புகள் என்பது பெரிய அச்சுறுத்தலாக கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகுதான் டிராக் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.



இதற்கு முன்னர் வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது அதை சோதித்துப் பார்க்கையில், அதற்கு காரணம் வைரஸ்ஸா அல்லது பாக்டீரியாவா என்று மட்டும் தான் பரிசோதனை செய்வார்கள். எனவே இப்பொழுது நோரோ வைரஸ் என்று குறிப்பிட்டு சொல்லப்படும் வைரஸ் கடந்த காலத்தில் சாதாரண வைரல் வயிற்று போக்காகவும் இருந்திருக்கலாம். தற்போது RTPCR மற்றும் வைரல் வகைப்படுத்துதல் ஆகியவை இருப்பதன் மூலம் எந்த வகையான வைரஸ் என்பதை எளிதாக கண்டு கொள்ள முடிகிறது. இதனால்தான் வெவ்வேறு பெயர்கள் வைத்து அடையாள படுத்தவும் முடிகிறது.

முகத்தில் இந்த இடங்களில் வலியை உணர்ந்தால் அது நுரையீரல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்..!

அசுத்தமான அல்லது கெட்டுப்போன உணவு மற்றும் தண்ணீர் மூலம் தான் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவு மற்றும் தண்ணீரில் கழிவு பொருட்கள் கலந்திருந்தால் ஒரு நிமிடத்திற்குள்ளேயே அது வைரஸால் பாதிக்கப்பட்டு பலருக்கும் தொற்று ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்குகிறது.



நோரா வைரஸ் அறிகுறிகள்:

வாந்தி, வயிற்றுப் போக்கு, தீவிரமான வயிற்று வலி மற்றும் தலைசுற்றல் ஆகியவை நோரா வைரஸின் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலியும் காணப்படும்.

அதிகரிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்கள்... அறிகுறிகளை அலட்சியம் செய்வதுதான் காரணமா..?

நோரா வைரஸ் சிகிச்சைகள்:

பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படும்பொழுது அதற்கு தனிப்பட்ட சிகிச்சை முறைகள் என்று கிடையாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் இருந்து தானாகவே வைரஸ் நீக்கப்படும். அதற்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்தான் நோரா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையாக வழங்கப்படுகிறது. ORS மற்றும் வீட்டில் சுகாதாரமாக செய்யகூடிய திரவ உணவுகள் தான் தீர்வு. மேலும், வீடு மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வதும் அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Norovirus

அடுத்த செய்தி