Home /News /lifestyle /

பெண்களின் மார்பின் முலைக்காம்புகளை சுற்றி புடைப்புகள் போன்று இருந்தால் ஆபத்தா..? எதனால் வருகிறது..?

பெண்களின் மார்பின் முலைக்காம்புகளை சுற்றி புடைப்புகள் போன்று இருந்தால் ஆபத்தா..? எதனால் வருகிறது..?

மார்பக பராமரிப்பு

மார்பக பராமரிப்பு

உங்களுக்கு மார்பு பகுதியில் கட்டிகள் போன்று இருந்தால் அவை மார்பாக புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் மார்பின் முலைக்காம்புகளில் புடைப்புகள் போன்று இருந்தால் அவை மாண்ட்கோமரியின் டியூபர்கிள்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

இன்றைய வாழ்வியல் சூழலில் பலவித உடல் சார்ந்த பாதிப்புகள் தினம்தோறும் வந்தவண்ணம் உள்ளது. ஆண்களுக்கு ஒரு சில பாதிப்புகள் என்றால், பெண்களுக்கு வேறு சில வகையில் பாதிப்புகள் உருவாகுகிறது. ஆனால் இப்படிப்பட்ட உடல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் மிக குறைவாகவே உள்ளது.

குறிப்பாக பெண்களின் உடல் சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு இங்கு சரியாக சென்றடையவில்லை. மாதவிடாய் முதல் மார்பக புற்றுநோய் வரை பல வித பாதிப்புகள் இவற்றில் அடங்கும். அந்த வகையில், பெண்களுக்கு தங்களது மார்பகம் சார்ந்து உருவாகிற பாதிப்புகள் மற்றும் நோய் அறிகுறிகள் குறித்து தெரிவதில்லை. மார்பு பகுதியில் சிலருக்கு புள்ளிகள் போன்றோ, கொப்புளங்கள் போன்றோ, பருக்கள் போன்றோ இருந்தால் அதை நாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்போம்.

அது சாதாரண கட்டி என்று தான் நினைப்போம். ஆனால், பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. மார்பு பகுதியில் இருக்க கூடிய சிறு கட்டி கூட உங்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கு மார்பு பகுதியில் கட்டிகள் போன்று இருந்தால் அவை மார்பாக புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் மார்பின் முலைக்காம்புகளில் புடைப்புகள் போன்று இருந்தால் அவை மாண்ட்கோமரியின் டியூபர்கிள்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த புடைப்புகள் "முலைக்காம்புகளை ஈரமாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறதாம். எனவே, இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் போன்றது," என்று அவர்கள் கூறுகின்றனர். இவை கட்டி வகையில் சேராது என்றும் குறிப்பிடுகின்றனர்.



பல பெண்கள் மார்பு காம்பில் உள்ள சிறுசிறு புடைப்புகளை வேறு எதோ பெரிய பாதிப்பு என்று கருதுகின்றனர். இந்த புடைப்புகள் "புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அவர்களுக்கான உணவு எங்கிருந்து வரப் போகிறது என்பதைச் சொல்லும் சில சுவையான வாசனை தன்மையையும் வெளியிடுகின்றது என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம், தாய்ப்பால் கொடுக்கும் போது எங்கு பால் குடிக்க வேண்டும் என்று குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர்.

திடீரென்று உங்கள் உடல் எடை அதிகரிக்கிறதா..? பொதுவான காரணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

மேலும் மார்பு காம்புகள் கருப்பாக இருப்பது இயல்பானது, ஏனெனில் இது இந்திய தோல் நிறத்திற்கு இயல்பானது, மேலும் முலைக்காம்புகளைச் சுற்றியுள்ள முடிகளும் இயல்பானவை. முடிகளை கூட பலர் ஷேவ் செய்கின்றனர். ஆனால், இது போன்று செய்ய வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாண்ட்கோமெரியின் டியூபர்கிள்ஸ் என்பது செபாசியஸ் என்கிற எண்ணெய் சுரப்பிகள் ஆகும். அவை கிருமிகளை மார்பகத்திலிருந்து விலக்கி வைக்கும் வேலையைக் செய்கின்றன. அதாவது, நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தால், இந்த சுரப்பிகளின் சுரப்பு உங்கள் தாய்ப்பாலை குழந்தை உட்கொள்ளும் முன் மாசுபடாமல் தடுக்க உதவும்.



பொதுவாக கர்ப்ப காலத்திலும், பருவ வயதை அடையும் போதும் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் போதும் இது போன்று மார்பு காம்பில் புடைப்புகள் ஏற்படலாம். எனவே, இது சாதாரணமான ஒன்று தான். இதை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஒரு வேளை உங்களுக்கு கட்டிகள் போன்று இருந்தால் அதை மருத்துவரிடம் சென்று அணுகுவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breast Care

அடுத்த செய்தி