Home /News /lifestyle /

புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்பு : காரணம் என்ன?

புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்பு : காரணம் என்ன?

புற்றுநோய்

புற்றுநோய்

அதிக அளவிலான மாசுபட்டால் இன்றைய சூழலில் மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
'புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்' என்கிற இந்த வாசகத்தை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். புகை பழக்கத்தால் மட்டுமே புற்றுநோய் உண்டாகும் என்று இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் புகை பழக்கம் இல்லாவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நுரையீரல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வாகனங்கள் வெளியிடும் புகை, வீடுகளிலும் வீட்டுக்கு வெளியிலும் சமையலுக்கு பயோமாஸ் எரிபொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் அதிக அளவில் காற்று மாசுப்படுகிறது.

இதனால் புகை பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மனித செயல்பாடுகள், புகைபிடித்தல் மற்றும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் கதிரியக்க சேர்மங்களான ரேடான், நுரையீரல் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் எந்தெந்த வழிகளில் ஏற்படும் என்பதை இனி பார்ப்போம்.

மாசுபாடு :

அதிக அளவிலான மாசுபட்டால் இன்றைய சூழலில் மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது. இதை பற்றி நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் படி, மாசுபாடுகளால் டிஎன்ஏ பாதிப்படைந்து நிறைய சிக்கல்களை உண்டாக்கும், மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கட்டிகளின் வளர்ச்சி அதிகரித்தல் போன்ற அபாயத்தை இது தரும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.



எரிபொருள்கள் :

காற்றில் நச்சு தன்மை அதிகரிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உருவாகும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை பயோமாஸ் எரிபொருள்களின் முழுமையற்ற எரிப்பு தன்மை ஆகும். இவை அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவோடு கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. இவற்றால் நுரையீரல் நேரடியாக பாதிக்கப்பட்டு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே முடிந்த அளவிற்கு நச்சுக்கள் மற்றும் மாசுக்களை உருவாக்கும் செயல்களை நாம் தவிர்த்தாக வேண்டும்.

இந்த 3 பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் கொரோனோவால் அதிகமாக பாதிக்கப்படலாம் : ஆய்வில் தகவல்!

மரபணு மாற்றங்கள் :

புரதங்கள் செயல்படும் விதத்தில் வேறுபாட்டை ஏற்படுவதற்கு காரணம் மரபணு மாற்றங்கள் தான். உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை புரதங்கள் செய்கின்றன. இருப்பினும், மரபணு மாற்றங்கள் மூலம் உடலில் உள்ள செல்கள் புற்றுநோயாகவும் மாறலாம். எனவே, புற்றுநோய்க்கான பரிசோதனையை தொடர்ந்து செய்துகொள்வது நல்லது.

எக்ஸ்-ரே :

நீங்கள் எக்ஸ்-ரே எடுக்கும்போது அதில் உள்ள ஷேடட் பகுதி ஒரு கட்டியாக கூட இருக்கலாம். மருத்துவர்களை பொறுத்தவரையில், எக்ஸ்-ரே என்பது பொதுவான கதிரியக்க சோதனைகளில் ஒன்றாகும்.



சிடி ஸ்கேன் :

ஒருவரின் உடலில் முக்கிய பாதிப்புகள் இருப்பது போன்று தோன்றினால் சிடி ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் கட்டியின் வடிவம், அளவு மற்றும் அது எந்த இடத்தில் தோன்றி உள்ளது போன்ற விவரங்களை சிடி ஸ்கேன்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கதிரியக்க அதிர்வெண் நீக்கம் (radiofrequency ablation) போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் CT ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது, சித்ஹில் உடலில் தோன்றியுள்ள கட்டியை அழிக்க வெப்பத்தை பயன்படுத்தப்படும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer, Smoking

அடுத்த செய்தி