Home /News /lifestyle /

கொரோனா அல்லாத இயற்கை மரணங்கள் குறைவு... வாழ்க்கைமுறை மாற்றமே காரணம் என ஆய்வில் தகவல்!

கொரோனா அல்லாத இயற்கை மரணங்கள் குறைவு... வாழ்க்கைமுறை மாற்றமே காரணம் என ஆய்வில் தகவல்!

பணிச்சுமை, காற்று மாசு, கொழுப்பு மிகுந்த உணவுகள் மற்றும் மக்களிடம் இருந்த சமகால வாழ்க்கைமுறை குறைந்ததால் உயிரிழப்புகளும் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    கொரோனா துன்பத்திலும் நன்மை என்பது போல், நாடு முழுவதும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

    இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அல்லாத உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்திருக்கின்றன. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் விழுக்காடும் 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணிச்சுமை, காற்று மாசு, கொழுப்பு மிகுந்த உணவுகள் மற்றும் மக்களிடம் இருந்த சமகால வாழ்க்கைமுறை குறைந்ததால் உயிரிழப்புகளும் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடும்பத்தினருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக செலவிடுவதும், நோய்கள் குறைந்திருப்பதற்கான காரணம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். இது மட்டுமின்றி, மக்கள் தனிமனித இடைவெளியைப் பெரிதும் கடைபிடிப்பதால், காய்ச்சல், தொற்று நோய்களும் கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Health

    அடுத்த செய்தி