ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மார்பக அளவை மசாஜ் , உணவு மூலம் மாற்ற முடியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மார்பக அளவை மசாஜ் , உணவு மூலம் மாற்ற முடியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மார்பக அளவு

மார்பக அளவு

மார்பகம் இந்த அளவில், இந்த வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு பெண்ணின் தோற்றம், உடலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பல விதமான கட்டமைப்புகள் உண்டு. அதில், பெண்ணின் மார்பங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக மார்பகங்கள் கொஞ்சம் பெரிதாக இருக்க, தளர்வான மார்பகங்கள் உறுதியாக, மார்பகங்கள் வடிவம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று உடற்பயிற்சி, மசாஜ் லோஷன், கிரீம், சில உணவுகள் ஆகியவை இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், என்ன செய்தாலுமே மார்பகங்களின் வடிவமும், அளவும் மாறாது.

அவ்வளவு எளிதாக மார்பகத்தின் வடிவத்தை மாற்றவே முடியாது. அவ்வாறு செய்யவேண்டுமென்றால், மார்பக அறுவை சிகிச்சைகளை தான் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி மார்பகத்தின் அளவை பெரிதாக்க, குறைக்க அல்லது வடிவத்தை மாற்ற பின்வரும் அறுவை சிகிச்சைகள் உதவும்.

Reduction Mammaplasty - மார்பக அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சை : மார்பகத்தின் அளவை குறைக்கும் இந்த அறுவை சிகிச்சையின் பெயர் ரிடக்ஷன் மாமாபிளாஸ்டி. மார்பகத்தின் அளவு மற்றும் எடையைக் குறைக்க, மார்பக சருமத்தில் வெட்டப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். மார்பக அழகை மேம்படுத்த ஒரு காஸ்மெட்டிக் சிகிச்சையாகவே பெரும்பாலும் இதைத் தேர்வு செய்வார்கள். ஆனால், சில நேரங்களில், தளர்வான மார்பகத்தை இறுக்கமாக்கவும் இதை செய்யலாம். இந்த சிகிச்சை மார்பகத்துக்கு நல்ல வடிவம் கொடுக்கும்.

Augmentation Mammaplasty – மார்பக வடிவை, அளவை மேம்படுத்தும் அறுவை சிகிச்சை : மார்பகத்தின் வடிவத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது மார்பகத்தின் அளவை பெரிதாக்கி, அல்லது முழுமையான மார்பகத்தைப் பெறுவதற்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய மார்பகம் இருப்பவர்கள், வடிவம் சரியாக இல்லாதவர்கக், தொய்வான மார்பகத்தின் வடிவத்தை மேம்படுத்த இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சரி, சரியான மார்பக அளவு என்பது எது..?

மார்பகம் இந்த அளவில், இந்த வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் மார்பகமும் ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு வடிவில் இருக்கும். ஒரு சிலருக்கு மிகச் சிறிய மார்பகங்களும், ஒரு சிலருக்கு சாதாரண மார்பகங்களும், ஒரு சில பெண்களுக்கு பெரிய அளவிலான மார்பகங்களும் இருக்கும். பொதுவாகவே மார்பங்கள் என்பது, வாழ்நாள் முழுவதுமே, அளவிலும் வடிவத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். எனவே இதற்கு இதுதான் அளவீடு என்று எந்த கட்டமைப்பும் பொருத்த முடியாது.

Also Read : உங்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருதா..? கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கலாம்... செக் பண்ணுங்க..!

ஒரு குழந்தை கருவில் உருவாகும் பொழுதே, மார்பகங்கள் வளரத் துவங்கும். அதனால்தான் ஆண்களுக்கும் மார்பகங்கள் இருக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் பருவ வயதை அடையும் பொழுது, பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் காரணமாக மார்பகங்களின் அளவு அதிகரிக்கிறது. ஆனால் மார்பகத்தின் அளவு வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு கால கட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்பகம் இந்த அளவில் இருந்தால்தான் அது கச்சிதமாக அழகாக இருக்கும் என்று எதையுமே குறிப்பிட முடியாது. இது தான் நார்மல் ஆன அளவு, இது பெரியது, இந்த வடிவம் என்று எந்த வரையறையும் இல்லை.

First published:

Tags: Breast changes