முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புகையிலை எதிர்ப்பு தினம் 2022 : புகைபிடிக்கும் பழக்கம் பாலியல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது..?

புகையிலை எதிர்ப்பு தினம் 2022 : புகைபிடிக்கும் பழக்கம் பாலியல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது..?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் தற்போது சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். த்ரிலுக்காக ஆரம்பித்தேன் என்று கூறி தொடர் பழக்கமாக மாறி விடுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். சிகரெட் பெட்டியின் அட்டையிலேயே அது எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றி அச்சிட்டு இருப்பார்கள். ஸ்மோக்கிங் ஆபத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் பலரும் அந்த பழக்கத்தை கைவிடுவதில்லை அல்லது முயற்சி செய்தும் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை.

புகைபடிப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உலக சுகாதார நிறுவனம் மே 31 அன்று புகையிலை எதிர்ப்பு தினம் என்பதை அறிவித்துள்ளது. புகைப்பிடிப்பது உடல் நலத்தை மட்டுமின்றி, பாலியல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

விளையாட்டாக நானும் ஒருமுறை செய்து பார்க்கிறேன், சிகரெட் பிடிப்பதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று ஒரு சிறிய ஆர்வத்துடன் அல்லது மற்றவர்களிடம் சவால் விடுவதன் மூலம் தான் பெரும்பாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் தொடங்கும். ஆனால் அதுவே, எனக்கு மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது ஸ்மோக் பண்ணிட்டு வரேன், சாப்பிட்டவுடனே சிகரெட் பிடிக்க வேண்டும், என்று பலரையும் அடிமையாக மாற்றிவிட்டது. சிகரெட் பிடிப்பது நாட்பட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

புகைப்பிடிப்பது அந்த நபரை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் புகைப்பிடிக்கும் போது வெளிப்படும் நச்சுக் காற்றை சுவாசிக்கும் அவரை சுற்றி இருக்கும் நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சுற்று சூழலுக்கும் பாதிப்பாக அமைகிறது. புகை பிடிப்பதால் காசநோய், நுரையீரல் அழற்சி மற்றும் கேன்சர் ஆகிய தீவிரமான நோய்கள் உண்டாகின்றன. புகை பிடிப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்பதை பற்றிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

சமீப காலமாக பல விதமான கான்ட்ரவர்சியில் விஷயங்களை பலரும் வெளிப்படையாக பேசி வந்தாலும் தற்போது வரை செக்ஸ், பாலியல் ஆரோக்கியம், பாலியல் வாழ்க்கை என்பதெல்லாம் தற்போது வரை வெளிப்படையாக பேசப்படாமல் இருக்கிறது. பாலியல் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தை கூறி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அந்தப் பழக்கத்தினால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் பாலியல் உறவும் பாதிக்கப்படுவதைத் அறிவதில்லை.

சிகரெட் பழக்கம் குழந்தையின்மைக்கு மிகப்பெரிய காரணமா..? ஆய்வாளர்கள் கூறும் உண்மை

ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் தற்போது சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். த்ரிலுக்காக ஆரம்பித்தேன் என்று கூறி தொடர் பழக்கமாக மாறி விடுகிறது. புகையிலையில் உள்ள பொருட்களான நிகோட்டின், கார்பன் மோனாக்சைடு ஆகியவை வாஸோ-கன்ஸ்ட்ரிக்ஷன் எனப்படும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு என்ன வகையான பாதிப்பு உண்டாகும்

எரைக்டல் டிஸ்ஃபன்க்ஷன் என்று கூறப்படும் விரைப்புத்தன்மை குறைபாடு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். சிகரெட்டில் இருக்கும் நச்சுக்கள் உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. ஆணுறுப்புக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாத பொழுது இந்த குறைபாடு ஏற்படும். அது மட்டுமன்றி சிகரெட் பிடிப்பதால் வெளியாகும் நச்சு, பாலியல் ஹார்மோன் உற்பத்தியை குறைத்து, பாலியல் உறவில் ஈடுபாடு வராத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புகைபிடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள்

ஆண்களுக்கு ஏற்படுவது போலவே பெண்களுக்கும் புகைபிடிப்பதால் ரத்த ஓட்டம் குறைந்து, பெண் உறுப்புகளில் போதுமான அளவுக்கு ஓட்டம் இல்லாமல் யோனி வறண்டு போதல், லுப்ரிகேஷன் இல்லாமல் இருப்பது மற்றும் செக்ஷுவல் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படும். புகை பிடிக்கும்போது கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு தீவிரமான ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகும்.

புகைபிடிக்கும் பழக்கமும் கருத்தரித்தலில் உள்ள பாதிப்பும்

பாலியல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம், கருத்தரிப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதாவது இயற்கையாகவே குழந்தை பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், ஆண் மற்றும் பெண் இருவருக்குமே புகை பிடிப்பது மலட்டுத்தன்மையை உண்டாக்கும். குழந்தை இல்லாமல் சிகிச்சை பெறும் தம்பதிகளில் புகை பிடிப்பவர்கள் அதிக அளவு இன்ஃபெர்டிலிட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண்களில் கரு முட்டையின் தரமும் ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

First published:

Tags: Smoking, Tobacco