உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டும் தான் இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. உடலை கட்டுக்கோப்புடன் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வெறும் கனவாகவே கடந்து போகிறது.
அதே சமயம், பலர் மனம் தளராமல் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் உணவுக் கட்டுப்பாடு மூலமாக உடல் எடையை குறைக்க முயற்சி எடுக்கின்றனர்.
சொந்த முயற்சிகள் பலன் தராத நிலையில், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் போன்றவர்களை அணுகி, ஆலோசனை பெற்று அதன்படி புதுமையான முயற்சிகளை மேற்கொள்பவர்களும் உண்டு.
அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் அண்மையில் மருத்துவரை சந்தித்தபோது, தனக்கு கிடைத்த புதுமையான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். உடல் எடை குறைப்புக்கு அந்த மருத்துவர் போட்ட கண்டிஷன்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.
சாப்பிடக் கூடாத உணவுகள்:
முதலில் உடல் உடையை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர் பட்டியலிட்டுள்ளார். அதில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மது மற்றும் சோயா பட்டர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்மார்ட் வாட்ச் அணிவதால் உடல் எடையில் ஏற்படும் ஷாக்கிங் மாற்றம் : ஆய்வு முடிவுகள்
இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் தயிர், வெள்ளரிக்காய் போன்றவற்றையும் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியலில் மருத்துவர் இணைத்திருப்பதுதான். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பழைய சோறு மற்றும் உருளைக் கிழங்கு, ஜூஸ் வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள அதே சமயத்தில், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
வைரல் ஆகும் பதிவு
மருத்துவரின் உணவுப் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அது வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக, இந்த பதிவை இதுவரையிலும் 60 ஆயிரம் யூசர்கள் படித்துள்ளனர். சுமார் 11 ஆயிரம் யூசர்கள் இதை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளனர்.
“நொறுக்குத் தீனி வேண்டாம்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சுண்டல் போதும்“… எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?
சாப்பிடக் கூடாது என்ற வகையில் பல பொருட்களை பட்டியலிட்டுள்ள மருத்துவர், சாப்பிடுவதற்கு எதைத்தான் விட்டு வைத்துள்ளார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள கமெண்டில், வெறும் தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் போதுமானதா’ என்று கிண்டல் செய்துள்ளார். என்னதான் இருந்தாலும் உருளைக் கிழங்கை விட்டுக் கொடுக்க முடியாது என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.