No smoking day 2021 : புகைபிடிப்பதை கைவிட உங்கள் அன்பானவர்களை ஊக்குவிக்க இந்த சூப்பரான டிப்ஸ்கள் உதவும்

மாதிரி படம்

ஒரு சிகரெட், புகைபிடிக்கும் நபருக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது புதன்கிழமை புகையிலை எதிர்ப்பு நாள் (நோ ஸ்மோக்கிங் டே) கொண்டாடப்படுகிறது. ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் உடல்நலக் கேடுகள் மற்றும் புகைப்பழக்கத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில், பல தனியார்-தொண்டு அமைப்புகளும் குழுக்களும் புகைபிடிக்கும் நபர்களை இந்த பழக்கத்தை விட்டு வெளியேற உத்வேகமளிக்கின்றன. ஒரு சிகரெட், புகைபிடிக்கும் நபருக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

புகைப்பழக்கம் ஒருவருக்கு நுரையீரல் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும். எனவே, புகையிலை எதிர்ப்பு நாள் 2021 அன்று, புகைப்பழக்கத்தை விட்டு வெளியேறுவதையும், உங்கள் அன்புக்குரியவர்களை சிகரெட் மற்றும் பிற புகை சார்ந்த தீய பொருட்களிலிருந்து விலகி இருக்க ஊக்குவிக்கவுமே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேற முயற்சிக்கிறீர்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களை நல்வழி படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், பின்வரும் டிப்ஸ்கள் நிச்சயம் உதவும்:



* முதலில் லைட்டர், ஆஷ் ட்ரே போன்ற புகைபிடித்தல் தொடர்பான எல்லாவற்றையும் ஓரங்கட்ட முயற்சி செய்யுங்கள்.

* புகைபிடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி விரிவாக விவரிக்கும் வீடியோக்களைப் பாருங்கள் அல்லது பாட்காஸ்ட்களைக் கேளுங்கள்.

* நிகோடினுக்கான ஏக்கத்தைக் குறைக்க காஃபினிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கவும்.
போதைப்பொருட்களிலிருந்து விடுபட உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது பிற குழுக்கள் மற்றும் அமைப்புகளை அணுகவும்.

* புகைபிடிக்காத நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் புகைபிடிக்க அனுமதிக்காத இடங்களிலும் உங்கள் நேரத்தை செலவிடலாம்.



* பொதுவாக ஒருவரின் உடல் சோர்வு நிகோடினுக்கான ஏக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

No smoking day : உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்திற்கு குட்பை சொல்ல சில யோசனைகள்..!

* உங்கள் உடலை நீரேற்றமாக வைத்து தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* புகைபிடிப்பதைத் தவிர்ப்பதற்கு உதவும் ஆப்ஸ்களைப் டவுன்லோட் செய்து அதை பயன்படுத்துங்கள். புகைபிடிக்கும் எண்ணம் வந்தால் உடனே உங்களுக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் பேசுங்கள்.

* ‘புகைப்பிடிப்பதை நிறுத்த உதவும்’ ஹெல்ப்லைன்களின் போன் நம்பர்களை கூடவே வைத்திருங்கள். ஒருவேளை நிலைமை எல்லை மீறினால், நிகோடின் மாற்று சிகிச்சையை எடுக்கலாம்.



* உங்களின் சின்ன சின்ன முன்னேற்றத்தை உங்களின் போனின் வால்பேப்பராக வையுங்கள். அதுவே உங்களுக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டும்.

புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதெல்லாம் புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்து வருவதும், இன்னொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை கொஞ்சம் மோசமானதுதான். உங்கள் அன்புக்குரியவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published: