No smoking day : உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்திற்கு குட்பை சொல்ல சில யோசனைகள்..!

கோப்பு படம்

மார்ச் 10-ம் தேதியான இன்று 2021-ஆம் ஆண்டிற்கான "நோ ஸ்மோக்கிங் டே" அனுசரிக்கப்படுகிறது

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது புதன்கிழமை "நோ ஸ்மோக்கிங் டே" கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 10-ம் தேதியான இன்று 2021-ஆம் ஆண்டிற்கான "நோ ஸ்மோக்கிங் டே" அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோடு, புகைப்பழக்கத்தை நிறுத்த மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு பிரிட்டனில் நோ ஸ்மோக்கிங் டே துவங்கியது. இந்த நாள் பிரிட்டனில் ஆண்டுதோறும் சுகாதார விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி அதை விட்டு விட நினைப்பவர்களுக்கு உதவும் நோக்கில் சுகாதார விழிப்புணர்வு தினமாக அங்கு அனுசரிக்கப்படுகிறது.

பிரிட்டனில் நோ ஸ்மோக்கிங் டே துவங்கிய பிறகு பல நாடுகளும் புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நாளை புகைபழக்கத்திற்கு எதிரான பொதுவான ஒரு நாளாக ஏற்று கொண்டன. குறைந்தது இன்று ஒரு நாளாவது புகைபிடிப்பதற்கு "நோ" சொல்லவேண்டும் என்பதும் இந்நாளின் நோக்கம். உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால், புகைப்பழக்கத்தால் உடலுக்கு ஏற்படும் அபாயங்கள் பற்றி கீழ்காணும் செய்திகளை படித்து பாருங்கள்.புகைபிடிக்கும் பழக்கம் உங்கள் நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் முழு உடலையும் மோசமாக பாதிக்கிறது. உடலில் பலவித சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதேசமயம் ஒரு சில உடல் விளைவுகள் ஏற்பட ஆண்டுகள் தேவை இல்லை உடனடியாக கூட ஏற்படும். சில மோசமான விளைவுகளை பற்றி காணலாம்..

புற்றுநோய் : புகைப்பழக்கம் வாய், தொண்டை, நுரையீரல், குரல்வளை உள்ளிட்ட புற்றுநோய்களுடன் தொடர்புடையது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. கேன்சர் நோயாளிகள் படும் அவதிகள் குறித்து நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கு இடையே தியேட்டரில் ஒளிபரப்புவார்களே. அதை விட கொடுமையான நிலை கூட புகைப்பிடிப்பதால் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவம் சொல்லும் விளக்கம்

சுவாச நோய்கள்: ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்க மாட்டேன். 3 அல்லது 4 தான் என்று சொன்னால் கூட, நீங்கள் சிறிது நேரம் புகைபிடித்தாலும், அது உங்கள் நுரையீரலில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உள் இழுக்கும் புகை சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுத்தும் அல்லது ஆஸ்துமாவை அதிகரிக்க செய்யும்.முக்கியமாக புகைபிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் கருவுறுதலையும் பாதிக்கும். விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கும் வாய்ப்பை சிகரெட்டுகள் அதிகரிக்கும். பெண்களில், இது ஹார்மோன் அளவை பாதிப்பதன் மூலம் கருத்தரிப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர் புகைபழக்கம் உடல் எடை இழப்பை ஏற்படுத்தி, பற்களின் நிறமாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. உங்கள் தோற்றம் மற்றும் வாழ்க்கை முறையையும் பாதிக்கும். உங்கள் சருமத்தில் முன்கூட்டிய சுருக்கம், வயதான தோற்றம், முடி உதிர்வு உள்ளிட்டவற்றை தீவிரமாக்கும்.

காலப்போக்கில், இதய நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, பக்கவாதம் மற்றும் பல வகையான புற்றுநோயின் கடுமையான நிலை வரை ஏற்பட்டு மரணம் வரை கொண்டு சென்று விடும். கஷ்டப்பட்டு உழைக்கும் காசை செலவழித்து மரணத்தை விலை கொடுத்து வாங்குவதா என்பதை சிந்தித்தால் உங்கள் நலன் மட்டும் அல்ல சமுதாய நலனும் காக்கப்படும்.

 
Published by:Sivaranjani E
First published: