No Smoking Day : புகைப்பழக்கம் கருவுறுதல், பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறதா?

மாதிரி படம்

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் புகைபிடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 9,30,000 இறப்புகளைக் நேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (No Smoking Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி உலக புகைபிடிக்காத தினம் கொண்டாடப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, புகைபிடிக்கும் அபாயகரமான பழக்கத்தை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் முயற்சிகளைக் இந்த நாள் கொண்டாடுகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் ஆபத்துகள் அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்பணிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கம் கொண்டவர்களை மீட்பதும் இந்த நாளின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. சிகரெட், பீடிஸ் அல்லது புகையிலை சம்பந்தப்பட்ட எதையும் தொடக்கூடாது என்று மக்களை ஊக்கப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றாட வாழ்க்கையில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துகின்றன. புகைப்பழக்கத்தின் தாக்கம், புகைபிடிக்கும் நபருக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.



அந்த வகையில், நோ ஸ்மோக்கிங் தினத்தை முன்னிட்டு புகைப்பழக்கம் கருவுறுதல் மற்றும் பிரசவத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பாப்போம். புகைபிடிப்பதன் காரணமாக ஏற்படும் மோசமான விளைவுகளில் ஒன்று, அவை ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். சிகரெட்டில் உள்ள carcinogen எனப்படும் ஒருவகை புற்றுநோயே இதற்கு காரணம். அதிகப்படியான புகைபிடித்தல் பிற கருவுறுதல் பிரச்சினைக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒரு ஆண் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால், அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை மூன்று முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் கணிசமாக மேம்படும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No smoking day : உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்திற்கு குட்பை சொல்ல சில யோசனைகள்..!

அதுவே, ஒரு பெண் புகைபிடித்தால், அது அவளது முட்டைகளையும் கருப்பையையும் பாதிக்கும். எனவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். புகைபிடிக்கும் பெண்களுக்கு வெற்றிகரமான இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) மற்றும் கருப்பையக கருவூட்டல் (IUI) ஆகியவை பாதி குறைந்து வருவதாக கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் அபூர்வா சதீஷ் அமர்நாத் கூறியுள்ளார். ஒருவேளை புகைப்பழக்கம் கொண்ட பெண்கள் அதிலிருந்து விலகினால், கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பொதுவாகவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களில் கருச்சிதைவு மற்றும் பிரசவத்தில் பிரச்சனை போன்ற ஆபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தீப் சதாவின் கூற்றுப்படி, ஒரு சிகரெட்டில் 4,000 தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை ஒரு தாயின் இரத்த ஓட்டத்தின் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இது குழந்தைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள் காரணமாக பிறக்கும் குழந்தை பெரும்பாலும் குறைந்த எடையுடன் பிறப்பது, சுவாச பிரச்சனை மற்றும் முன்கூட்டிய பிரசவம் (Premature Delivery) போன்ற விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் புகைபிடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 9,30,000 இறப்புகளைக் நேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, புகைப்பழக்கத்தை விடுவோம். உடல்நலத்தை காப்போம்.

 
Published by:Sivaranjani E
First published: