• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிட் -19 அதிகரித்த சமயத்தில் குறைப்பிரசவம் அதிகரிக்கவில்லை - ஆய்வில் தகவல்!

கோவிட் -19 அதிகரித்த சமயத்தில் குறைப்பிரசவம் அதிகரிக்கவில்லை - ஆய்வில் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ துவங்கிய முதல் ஆண்டில் (2020-ல்), குறைப்பிரசவம் மற்றும் குழந்தைகள் இறந்தே பிறப்பது உள்ளிட்ட சிக்கல்களில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று கனடிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

  • Share this:
தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட பின்னரும் கொரோனா தொற்று இரண்டு, மூன்று, நான்கு என அலை அலையாக வந்து கொண்டிருப்பது உலக மக்களை தொடர்ந்து அச்சத்திலேயே வைத்து இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ துவங்கிய முதல் ஆண்டில் (2020-ல்), குறைப்பிரசவம் மற்றும் குழந்தைகள் இறந்தே பிறப்பது உள்ளிட்ட சிக்கல்களில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று கனடிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய தகவல் கர்ப்ப காலத்தில் கோவிட் -19 தொற்று நோயின் தாக்கத்தைப் பற்றிய கவலையை சற்றே தணிக்கிறது.

இந்த ஆய்வில் கோவிட் -19 மற்றும் அதிகரித்த குறைப்பிரசவங்கள் மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் பிரசவங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வளார்கள் குறிப்பிட்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்படுவது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே கடும் பாதக விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும் என்று முன்னர் நடத்திய ஆய்வு முடிவுகள் கூறியிருந்த நிலையில், மேற்கொண்டும் பிரசவ சிக்கல்கள் தொற்று நோயின் முதலாம் அலையில் அதிகரிக்கவில்லை என்ற சமீபத்திய ஆய்வு முடிவு ஆறுதலை தந்துள்ளது.

கர்ப்பம் மற்றும் பிரசவ காலத்தில் கோவிட் -19 தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள உலகம் முழுவதும் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வு சற்று பெரியது என்றே கூறலாம். ஏனென்றால் தொற்று நோய் வீரியமுடன் இருந்த போது இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா மற்றும் பிற நாடுகளில் அதிகரித்த குறைப்பிரசவம் மற்றும் குறைப்பிரசவ விகிதங்களில் சில மாறுபாடுகள் இருப்பதாக எடுத்துக்காட்டிய பெரும்பாலான ஆய்வுகள் சிறியவை.



ஆனால் டொராண்டோ பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சி குழு Ontario-வில் 18 வருட காலப்பகுதியில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பிறப்புகளை ஆய்வு செய்தது மற்றும் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தின் (2002-2019) போக்கை தொற்றுநோய் காலத்துடன் (ஜனவரி முதல் டிசம்பர் 2020 வரை) ஒப்பிட்டது. தங்கள் ஆய்வு குறித்து தகவல் தெரிவித்துள்ள டொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். பிரகாஷ் ஷா, " எங்கள் ஆய்வில் கொரோனா தொற்று நோயின் போது, குறைப்பிரசவம் அல்லது பிறப்பு விகிதத்தில் அசாதாரண மாற்றங்களை காணவில்லை" என்று கூறினார்.

உலக தாய்ப்பால் வாரம் : தாய்ப்பால் நேரடியாக கொடுப்பது அல்லது பிரஸ்ட் பம்ப் செய்வது இரண்டில் எது சிறந்தது? நன்மை, தீமைகள் என்ன?

மேலும் பேசிய அவர், தொற்று நோய் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் இணங்குவது வெவ்வேறு அமைப்புகளில் முன்கூட்டிய பிறப்பு விகிதங்களை பாதிக்கும். அந்த வகையில் ஆராய்ச்சியாளர்கள் பொது சுகாதார பிரிவுகளில் பிறப்பு முடிவுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பிறப்பு மற்றும் அண்டை நாடுகளில் உள்ளவர்களை ஒப்பிடுகையில் அங்கு SARS-CoV-2-க்கான நேர்மறை விகிதங்கள் அதிகமாக இருந்தன. சில பகுதிகளிலும் குறிப்பிட்ட மக்களிலும், தொற்றை ஒட்டிய கட்டுப்பாடுகள் நன்மை தரும் என்றாலும், மற்ற அமைப்புகள் அல்லது தனிநபர்களில் கட்டுப்பாடுகள் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.



தொற்று, வீக்கம், மன அழுத்தம், மருத்துவ அல்லது கர்ப்பத்தால் தூண்டப்பட்ட கோளாறுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் குறைப்பிரசவம் மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் பிரசவங்களுக்கு காரணமாக அமைகின்றன. இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் காரணம் அறிய முடியாமலும் போகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: