Home /News /lifestyle /

எந்தெந்த வயதினர் எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும்..? உங்களுக்கான முழுமையான கைட்லைன்..!

எந்தெந்த வயதினர் எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும்..? உங்களுக்கான முழுமையான கைட்லைன்..!

டயட் திட்டம்

டயட் திட்டம்

இன்று யாரை பார்த்தாலும் 'நான் டயட்டில் உள்ளேன், இதை சாப்பிட மாட்டேன், அதை சாப்பிட மாட்டேன்' போன்ற வார்த்தைகளை பெரும்பாலும்  கேட்க நேரிடுகிறது

இன்று யாரை பார்த்தாலும் 'நான் டயட்டில் உள்ளேன், இதை சாப்பிட மாட்டேன், அதை சாப்பிட மாட்டேன்' போன்ற வார்த்தைகளை பெரும்பாலும் கேட்க நேரிடுகிறது. எல்லா வயதினரும் டயட் இருப்பதாக சொல்கின்றனர். அதே போன்று எல்லா வயதினரும் ஒரே மாதிரியான உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். இது சரியான வழி முறையா என்பதை அவசியம் யோசிக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்ப டயட் முழுமையாக மாறுபடும். இந்த டயட் முறையை இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வகை சில வகைகளாக பிரிக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த வயதினர் எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பதின் பருவத்தினர்

பொதுவாக பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கு மற்றதை விடவும் தற்போது ஊட்டச்சத்துகள் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. விரைவான வளர்ச்சி காலத்தில் இவர்கள் இருப்பதால்,சீரான ஹார்மோன் சமநிலைக்கு ஆரோக்கியமான உணவுகள் மிகவும் அவசியம். எனவே சமச்சீர் உணவை உட்கொள்வது முக்கியமானது. மீன், அவகேடோ, பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் உள்ள நல்ல கொழுப்பை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

மேலும் பதின் பருவ பெண்களுக்கு இந்த நிலையில் மாதவிடாய் தொடங்குவதால் இரும்புச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை தவிர்க்கவும்.



30 வயதுக்கும் கீழுள்ளவர்கள்

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை 30 வயதுக்கும் கீழுள்ளவர்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும். அதே போன்று வைட்டமின் டி சத்தும் மிக முக்கியம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், புரோட்டீன்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவில் இருக்க வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாக திட்டமிடுகிறீர்கள் என்றால், வைட்டமின் டி, பி12, இரும்புசத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கிய சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வது அவசியம். இறைச்சி மற்றும் பால் பொருட்கள், கடல் உணவுகள், கீரை வகைகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள், உலர் பழங்கள், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை இந்த வயதினருக்கும் மிகவும் நல்லது.

நாட்டு கோழி முட்டை அல்லது பிராய்லர் கோழி முட்டை... இரண்டில் எது நல்லது..? நிபுணர்கள் விளக்கம்

40 - 50 வயதுடையவர்களுக்கு

40 - 50 வயதுடைய பெண்கள், அதிக கால்சியம் மற்றும் இரும்புச்சத்துள்ள பெர்ரி, கோகோ, கிரீன் டீ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மேலும் முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளையும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் டி மற்றும் வைட்டமின் சி தவிர, வைட்டமின் B12'ம் நரம்பியல் செயல்பாட்டிற்கு முக்கியமான ஒன்றாகும்.

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் இந்த வயதினரிடையே அடிக்கடி காணப்படுவதால், குறைந்த கிளைசெமிக் அளவும், குறைந்த கொழுப்பு அளவும் அதிக புரத அளவும் உள்ள உணவுகளை சாப்பிடலாம். இவற்றுடன் தொடர்ச்சியான பயிற்சியும் மிக அவசியம்.



60 வயதை கடந்தவர்கள்

நீங்கள் 60 வயதிற்கு மேல் கூட சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இருக்க விரும்பினால், உங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் அதிகப் படியான உப்பு ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், சர்க்கரை கலந்த உணவுகளையும் ஒதுக்குவது நல்லது.

எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க போதுமான தண்ணீர் மிக அவசியம். அதே போன்று சமச்சீர் உணவு முறையையும் பின்பற்றி வர வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diet Plan, Fitness

அடுத்த செய்தி