முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மழைக்காலங்களில் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகக் காம்பில் தொற்று ஏற்பட என்ன காரணம்..? தடுக்கும் வழிமுறைகள்

மழைக்காலங்களில் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகக் காம்பில் தொற்று ஏற்பட என்ன காரணம்..? தடுக்கும் வழிமுறைகள்

முலைகாம்பு தொற்று

முலைகாம்பு தொற்று

இன்றைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகளவில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று மார்பு காம்பில் ஏற்படும் தொற்று நோய் (முலையழற்சி). இதனைச் சரியாக கவனிக்காவிடில் மார்பக புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை விரைவாக பரவக்கூடும். இதன் காரணமாக தான் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக காம்பு தொற்று இந்நாள்களில் அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகளவில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று மார்பு காம்பில் ஏற்படும் தொற்று நோய் (முலையழற்சி). இதனைச் சரியாக கவனிக்காவிடில் மார்பக புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்நேரத்தில் ஏன் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பு காம்பில் தொற்று ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்..

மார்பக காம்பு தொற்று ஏற்பட காரணம்?

பொதுவாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் முதல் 3 மாதங்களுக்குத் தான் இந்த உபாதைகள் பெருமளவில் ஏற்படும்.

மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை விரைவாக பரவக்கூடும். இதன் காரணமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு முலைக்காம்பு தொற்று அதிகளவில் ஏற்படுவதாக மகப்பேறு மருந்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நாள்களில் மார்பகங்களில் மார்பு காம்புகளில் வெளிப்புறம், உள்புறம், மார்பு காம்புகளைச் சுற்றி வெடிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படும். இந்த அலர்ஜி இயல்பாக ஏற்படக்கூடியது என்றாலும் கவனிக்காமல் விட்டுவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பல்வேறு உடல் நலம் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவற்றில் ஒன்று தான் முலைக்காம்பு தொற்று.

50 வயதிற்கு பின் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டிய உணவு பழக்கங்கள்...!

மார்பக காம்பு தொற்றின் அறிகுறிகள்:

குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு, முலைக்காம்பு வலி, முலைக்காம்புகளில் எரிச்சல் மற்றும் அரிப்பு உணர்வு, முலைக்காம்புகளில் வீக்கம் மற்றும் மார்பக காம்பை சுற்றி சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் முலைக்காம்புகளைச் சுற்றியுள்ள திட்டுகள் சில சிவப்புக் கொடிகள் காணப்படும்.

பால் கொடுத்த நீண்ட நேரத்திற்கு மார்பக காம்புகளில் வலி உண்டாகும். இந்த தொற்றின் காரணமாக குழந்தைகளும் பால் குடிக்க முடியாமல் தொடர்ச்சியாக அழுவார்கள்.

மார்பக காம்புகள் வறட்சியாக இருக்கும். சிலருக்கு வெடிப்பு நன்றாக தெரியும். கை வைக்கும் போதே எரிச்சல் இருக்கும்.

பால் கொடுக்க முடியாமல் பால் கட்டிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.

சிகிச்சை முறை:

முலைக்காம்புகளில் பூஞ்சை தொற்று இருப்பதை உறுதிசெய்த பிறகு மருந்துவர்கள் பரிந்துரையின் படி, பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், கிரீம், ஜெல் மற்றும் களிம்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக இத்தொற்று சரியாக 7 முதல் 15 நாள்கள் கூட ஆகும் என்பதால் அதுவரை மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவேண்டும்.

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்

தவிர்ப்பது எப்படி?

தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு மற்றும் கொடுத்த பின்னர் சுத்தமான நீரில் மார்பகத்தைக் கழுவ வேண்டும். குறிப்பாக காம்புகளில் பால் கசியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளாடைகளை வெந்நீரில் அலறி வெயிலில் காய வைக்க வேண்டும். தற்போது தாய்ப்பால் கொடுப்பதற்காகவே உள்ள பிரத்யேக ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மார்பில் உராய்வு ஏற்படாத வகையில் ஆடைகளை அணிய வேண்டும்.

மார்பகங்களில் கை வைப்பதற்கு முன்னதாக நன்றாக கைகளைக் கழுவிட விடவேண்டும். குழந்தைகளுக்கு டயாப்பர் மாற்றினாலும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னர் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும்.

First published:

Tags: Breast Care, Breastfeeding