கேரளாவில் மாணவருக்கு நிபா வைரஸ்... சோதனையில் உறுதியானது...!

நிபா வைரஸ் பாதிப்புக்கான மருந்துப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் உறுதியளித்துள்ளார்.

Web Desk | news18
Updated: June 4, 2019, 12:53 PM IST
கேரளாவில் மாணவருக்கு நிபா வைரஸ்... சோதனையில் உறுதியானது...!
நிபா வைரஸ்
Web Desk | news18
Updated: June 4, 2019, 12:53 PM IST
கேரளாவில் கல்லூரி மாணவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுள்ள நிலையில், நிபா வைரஸ் குறித்து யாரும் பீதியடையத் தேவையில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானதால் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில், எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒவருவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நிபா பாதிப்புக்கு ஊசி போடும் மருத்துவர்


மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2 செவிலியர்கள், 22 மாணவர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், நிபா வைரஸ் பாதிப்பால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் நிபா வைரஸ் பாதிப்புள்ள திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

Loading...

நிபா வைரஸ்


விலங்குகளில் இருந்து இந்த வைரஸ் பரவுவதால், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, நிபா வைரஸ் பாதிப்புக்கான மருந்துப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் உறுதியளித்துள்ளார்.

Also see... நிபா வைரஸின் தோற்றமும்... பரவலும்...!

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...