உஷார்… சிறுநீரகத்தை பாதிக்கும் நைட் ஷிஃப்ட்!

முடிந்த வரை நைட் ஷிஃப்ட் பணிகளை தவிர்க்க பாருங்கள். அல்லது, உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு முக்கியம் கொடுக்க மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

Web Desk | news18
Updated: March 17, 2019, 12:56 PM IST
 உஷார்… சிறுநீரகத்தை பாதிக்கும் நைட் ஷிஃப்ட்!
மாதிரி படம்
Web Desk | news18
Updated: March 17, 2019, 12:56 PM IST
நைட் ஷிஃப்ட் பணிகளில் தொடர்ந்து வேலை செய்து வருபவர்களுக்கு அதிகளவில் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உடலுக்கு இரவு நேர தூக்கம் மிகவும் அவசியம். ஆனால், வர்த்தகப் போட்டி மற்றும் வேலையில்லா திண்டாட்டங்கள் காரணமாக, நைட் ஷிஃப்ட் பணிகளில் பெரும்பாலானோர் வேலை செய்து வருகின்றனர்.

பகல் நேரத்தில் வேலை செய்வோரை விட, இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உடல் நலம் கெடுவதை தாண்டி அவர்களது சிறுநீரகம் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக பார்சிலோனாவில் சமீபத்தில் சிறுநீரகவியல் மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிந்தவரை நைட் ஷிஃப்ட் பணிகளை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர். முடியாத பட்சத்தில், அதிக தடவை சிறுநீர் கழிக்க வேண்டும், என்றும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், இதுதொடர்பாக சான்ட் ஆன்ட்ரியா மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் 68 ஆண்கள் மற்றும் 68 பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில், 66 தன்னார்வலர்கள் 70 நாட்கள் இரவுப் பணி செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில், பகலில் வேலை செய்த 19 பேருக்கும் நைட் ஷிஃப் வேலை செய்த 31 பேருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், முடிந்த வரை நைட் ஷிஃப்ட் பணிகளை தவிர்க்க பாருங்கள். அல்லது, உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு முக்கியம் கொடுக்க மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

Also See..
First published: March 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...