ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட இஸ்டா பதிவு..!

பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட இஸ்டா பதிவு..!

டைப் 1 நீரிழிவு நோய் - நிக் ஜோனஸ்

டைப் 1 நீரிழிவு நோய் - நிக் ஜோனஸ்

டைப் 2 நீரிழிவு என்பது இன்சுலின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இதனை நீங்கள் உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் சரி செய்யலாம். ஆனால், டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பு என்பது முற்றிலுமாக நின்றுபோய் விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் கண் எதிரே உள்ள 10 பேரில் 5 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், அது கட்டாயம் டைப் 2 நீரிழிவு நோயாக இருக்கும். ஆனால், டைப் 1 நீரிழிவு என்பது வெகு சிலரை மட்டுமே பாதிக்கக் கூடியது. பொதுவாக டைப் 2 நீரிழிவு என்பது பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், டைப் 1 நீரிழிவு நோய் அப்படி கிடையாது. சிறு குழந்தைகளையும் கூட இது பாதிக்கும்.

பாடகர் நிக் ஜோனஸ், கடந்த 2005ஆம் ஆண்டு அவரது 13ஆவது வயதில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட 4 விதமான அறிகுறிகளை இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை இழப்பு மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன.

தற்போது 30 வயதாகும் நிக் ஜோனஸ் தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக, பிறர் இந்த நோயால் பாதிக்கப்படும்போது அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைப் 1 நீரிழிவு எதனால் ஏற்படுகிறது?

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே சில சமயங்களில் நமக்கு எதிரானதாக அமைந்து விடுகிறது. தவறுதலாக நோய் எதிர்ப்பு சக்தி நம்மை தாக்க தொடங்கும் நிலையில், உடலில் இன்சுலின் சுரப்பு நின்றுவிடுகிறது. இந்த இன்சுலின் தான் நம் உடலில் சேரும் குளுக்கோஸ்களை ஆற்றலாக மாற்றுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “டைப் 2 நீரிழிவு என்பது இன்சுலின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இதனை நீங்கள் உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் சரி செய்யலாம். ஆனால், டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பு என்பது முற்றிலுமாக நின்றுபோய் விடுகிறது.

ஆகவே, இந்த நோய் தாக்கிய தருணத்தில் இருந்தே நாம் செயற்கையாக இன்சுலின் செலுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். தோராயமாக 5 முதல் 10 சதவீத மக்கள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தனர். உலகெங்கிலும் 2021ஆம் ஆண்டு ஆய்வின்படி மொத்தம் 8.4 மில்லியன் மக்கள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருகின்ற 2040ஆம் ஆண்டில் இது 13.5 மில்லியனில் முதல் 17.4 மில்லியன் வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் வேறுபடுமா.?

எந்தெந்த நாடுகளில் அதிகம்?

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, பிரிட்டன், ரஷியா, கனடா, சவுதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகிய 10 நாடுகளில் தான் டைப் 1 நீரிழிவு பாதிப்பு மிகுதியாக இருக்கிறது. அதாவது, உலக அளவிலான எண்ணிக்கையில், இந்த 10 நாடுகளில் இருந்து மட்டும் 60 சதவீத நோயாளிகள், அதாவது 5.08 மில்லியன் நோயாளிகள் இருக்கின்றனர்.

நோயாளிகள் என்ன செய்யலாம்?

ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை அடிக்கடி பரிசோதனை செய்து கட்டுப்பாட்டில் வைக்கவும். மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவு இன்சுலின் செலுத்திக் கொண்டால் மட்டுமே ரத்த சர்க்கரை கட்டுப்படும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வப்போது சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரையால் கண்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diabetes, Diabetes symptoms