செய்தித்தாளில் மடித்த உணவுகளை உட்கொண்டால் புற்றுநோய் வருமா..?

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து சாப்பிடுவது பொருட்களில் அந்த கெமிக்கல்கள் கலந்து அவை உடலுக்கு எதிர்மறையான ஆபத்துகளை விளைவிக்கின்றன.

செய்தித்தாளில் மடித்த உணவுகளை உட்கொண்டால் புற்றுநோய் வருமா..?
செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து சாப்பிடுவது பொருட்களில் அந்த கெமிக்கல்கள் கலந்து அவை உடலுக்கு எதிர்மறையான ஆபத்துகளை விளைவிக்கின்றன.
  • News18
  • Last Updated: August 21, 2019, 4:35 PM IST
  • Share this:
செய்தித்தாள்களில் அச்சிடப்படும் இரசாயணக் கலப்படங்கள் உடலுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தது என உணவுத் தர கட்டுப்பாட்டு அமைச்சகம் (Food Safety and Standard Authority of India) அறிவித்துள்ளது.

செய்தித்தாள்களில் நொறுக்குத் தீனிகள், பஜ்ஜி, போண்டா என பெரும்பாலும் டீ கடைகளில் எண்ணெய் பொருட்களை சாப்பிட மடித்துக்கொடுப்பார்கள். அதற்குபின் இப்படியொரு ஆபத்து இருப்பதாகக் கூறுவது அனைவரிடமும் பயத்தை உண்டாக்குகிறது.
அந்த ஆய்வில் செய்தித்தாள்களில் அச்சிடப்படும் கெமிக்கல் பலவகையான உயிர்சக்தி பொருட்களை உள்ளடக்கியது. எனவே அதில் உணவுகளை மடித்து சாப்பிடுவது பொருட்களில் அந்த கெமிக்கல்கள் கலந்து அவை உடலுக்கு எதிர்மறையான ஆபத்துகளை விளைவிக்கின்றன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த செய்தித்தாள் அச்சுகள் ஆபத்தை உண்டாக்கும் நிறங்கள், நிறமிகள், பைண்டர்கள் மற்றும் இதர சேர்க்கைகள் என பல வகையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றன. அதோடு ரசாயணக் கலப்படம் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளின் இருப்பிடமாக இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த அந்த செய்தித்தாளில் உணவை வைத்து சாப்பிடுவது புற்றுநோய்க் கிருமிகளை உண்டாக்ககூடிய ஆபத்தை கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் இந்த ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி FSSAI இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடமும், சிறு தெருவோரக் கடைகளிலும் பரப்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. மக்களும் தாங்கள் உணவு உண்ணச் செல்லும் கடை வியாபாரிகளிடம் இதுகுறித்து கற்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...