ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரோனாவை விட வேகமாக பரவி வரும் டெங்கு வேரியன்ட் அபாயம் : அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்...

கொரோனாவை விட வேகமாக பரவி வரும் டெங்கு வேரியன்ட் அபாயம் : அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்...

கேரளா , தெலுங்கானா, மகாராஷ்டிரா , உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா என கடந்த 6 மாதங்களில் மட்டும் 11 மாநிலங்களில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

கேரளா , தெலுங்கானா, மகாராஷ்டிரா , உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா என கடந்த 6 மாதங்களில் மட்டும் 11 மாநிலங்களில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

கேரளா , தெலுங்கானா, மகாராஷ்டிரா , உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா என கடந்த 6 மாதங்களில் மட்டும் 11 மாநிலங்களில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கொரோனா பரவலின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வரும் சமயத்தில் டெங்கு வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு காரணம் டெங்கு வைரஸ் புதிய மாற்றத்தை அடைந்திருப்பதாகவும்..அதனால்தான் இத்தனை பெரும் பாதிப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி இப்போது இருக்கும் கவலை என்னவெனில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டிற்குமான அறிகுறிகளை கண்டறிவது சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர். ஏனெனில் டெங்கு வேரியன்ட் மற்றும் கொரோனா வேரியன்ட் இரண்டும் ஒத்த அறிகுறிகளை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

கேரளா , தெலுங்கானா, மகாராஷ்டிரா , உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா என கடந்த 6 மாதங்களில் மட்டும் 11 மாநிலங்களில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பொதுவாகவே மழைக்காலங்களில் டெங்கு வைரஸ் பரவல் தலை தூக்க ஆரம்பிக்கும் என்றாலும்..மழைக்காலம் தொடங்கும் முன்னரே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கொரோனா வைரஸின் தாக்கமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸின் நான்கு செரோடைப்களில், DENV-2, அல்லது D2 வேரியன்ட் தற்போது புழக்கத்தில் உள்ளது. இது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா, இந்த விகாரமானது குறிப்பாக அச்சுறுத்தும் மற்றும் இறப்பைத் தூண்டும் திறன் கொண்டது என்றும், மேற்கு உ.பி.யில் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

DENV வேரியண்ட் அதிக அளவில் உயர்ந்திருப்பதற்குக் காரணம் வழக்கத்தை காட்டிலும் அதிக கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநிலங்கள் முழுவதும், வழக்கத்தை விட அதிக டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டது மட்டுமல்லாமல், உ.பி., கேரளா போன்ற சில மாநிலங்களில் அதிக மக்கள், குறிப்பாக குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, குறிப்பாக கொசுக்களால் பரவும் வைரஸின் டி 2 விகாரத்தின் காரணமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் DENV விகாரங்கள் கடுமையான அல்லது லேசான காய்ச்சல் போன்ற நோயை ஏற்படுத்தும் போது, D2 போன்ற குறிப்பிட்ட DENV விகாரங்கள் கடுமையான அறிகுறிகளை உண்டாக்குவதோடு அதன் தீவிரத்தையும் அதிகரிக்கிறது. எனவே அவை சரியான நேரத்தில் நிர்வகிக்கப்படாவிட்டால் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்கின்றனர். சில மருத்துவ அதிகாரிகள் வைரஸ் நுழைவை எளிதாக்கும் DENV-2 இன் வெளிப்படையான திறனையும் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும் புதிதாக வரும் அறிகுறிகளாக காய்ச்சலோடு இரத்தக்கசிவும் உண்டாகிறது.

முதலில் டெங்கு வைரஸ் பரவும்போது டி 1, டி 2, டி 3 மற்றும் டி 4 என நான்கு வடிவங்களாக உருவெடுப்பதாக கண்டறிந்துள்ளனர்.

டிஎன்வி நோய்த்தொற்றின் மாறுபாடுகள், கோவிட் -19 போன்றது. அதாவது அதிகமாக பரவுவது மட்டுமன்றி அச்சுறுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது. வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால், இதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் என்கின்றனர்.

கொரோனா வைரஸின் மாறுபாடுகள் வேகமாகப் பரவி, அறிகுறியற்ற நோயை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், டெங்கு நோய்த்தொற்று என்பது கொசுக்களின் கடித்தால் பரவுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கொரோனாவைப் போல் பாதிக்கப்பட்ட நபரின் சுவாசத் துளிகள் மூலம் பரவுவதில்லை.

மறுபுறம் கோவிட் வைரஸின் மாறுபாடும் மக்களிடம் பல்வேறு அறிகுறிகளை உண்டாக்கும். இது மக்களை வித்தியாசமாக தாக்கக்கூடும். அதாவது லேசான, மிதமான அல்லது கடுமையான தொற்றுநோயாக இருந்தாலும், சில பொதுவான அம்சங்கள் காய்ச்சல், சளி, இருமல், சளி, தொண்டை புண், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, தீவிர சோர்வு மற்றும் பலவீனம்- இவை அனைத்தும் இருக்கும். இந்த அறிகுறிகள் டெங்கு மற்றும் மலேரியாவுடனும் ஒத்துப்போகும் அறிகுறிகளாகும்.

மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் டெங்குவா? கொரோனாவா? என்பதை அறிவது எப்படி?

இருப்பினும் இவை இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க சில வழிகள் :

வாசனை மற்றும் சுவை இழப்பு மற்றும் பிற மேல் சுவாசக்குழாய் அழற்சியின் அறிகுறிகள் COVID-19 இல் மட்டுமே இருக்கிறது, டெங்குவில் அவ்வாறு இல்லை.

மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது சுவாசப் பிரச்சினைகளும் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கின்றன. ஆனால் டெங்குவில் இந்த அறிகுறிகள் இல்லை.

டெங்கு அடிக்கடி தலைவலி அல்லது பலவீனமாக உணர வைக்கும். நீங்கள் COVID-19 க்கு ஆளாகியிருந்தால் எப்போதுமே அப்படி இருக்காது.

டெங்கு எளிதில் தடுக்கக்கூடிய ஒரு நோயாக இருந்தாலும், டெங்கு நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இருப்பினும் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தால் விரைவில் குணமடையலாம். உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Dengue, Dengue Variant