முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / New Year 2022 : உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் புத்தாண்டு தீர்மானங்கள்

New Year 2022 : உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் புத்தாண்டு தீர்மானங்கள்

புத்தாண்டு 2022

புத்தாண்டு 2022

புத்தாண்டுத் தீர்மானங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றிமையாதது. சின்னச்சின்ன மாற்றங்களை உங்கள் புத்தாண்டு தீர்மானங்களாக மேற்கொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

  • Last Updated :

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதிலிருந்து நம்முடைய உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட கொரோனா தொற்று பாதிப்பு, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி மன நலத்தையும் பாதித்துள்ளது.

ஆரோக்கியத்தை ஆகியவற்றை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தான் தற்போதைய அதிகபட்ச தேவையாக இருக்கிறது. புத்தாண்டுத் தீர்மானங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றிமையாதது. சின்னச்சின்ன மாற்றங்களை உங்கள் புத்தாண்டு தீர்மானங்களாக மேற்கொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுகள்

புத்தாண்டை ஆரோக்கியமாக தொடங்குவது என்பது ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் இருந்து தொடங்குகிறது. முழு உணவுகள் என்று சொல்லப்படும் முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

நீண்டகாலம் பலன் அளிக்கக்கூடிய உணவு முறை

எடை குறைப்பு அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட உணவு பழக்கத்தை அதாவது டயட்டை பின்பற்றுவது நீண்ட காலத்திற்கு பலனளிக்காது. உதாரணமாக அதிக புரதம் மற்றும் குறைவான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் டயட்டை பின்பற்றி வந்தால் அது அந்தப் பழக்கத்தை மேற்கொள்வது வரைதான் பலனளிக்கும். நீங்கள் இந்த டயட்டை கைவிட்டால், விரைவிலேயே எடை அதிகரிக்கும். எனவே உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, உங்கள் எடை குறைப்பது, ஆரோக்கியம் மற்றும் பிற இலக்குகளுக்கு ஏற்றவாறு உங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள். அதுமட்டுமின்றி எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

வைட்டமின் டி சத்து

உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் டி. இது இலவசமாக சூரிய ஒளியில் இருந்து கிடைக்கூடிய சத்து. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. மேலும், வைட்டமின் டி சத்துக் குறைபாடு பல்வேறு நோய்களை உண்டாக்கும் அபாயம் கொண்டுள்ளது. தினமும் 15 முதல் 20 நிமிடங்களாவது சூரிய ஒளி உங்கள் மீது படும் வகையில் வெளியிடங்களில் நடமாட வேண்டும்.

உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த புத்தாண்டை கொண்டாடுவதற்கான 5 யோசனைகள்

தினசரி உடற்பயிற்சி அல்லது உடலுக்கு வேலை

நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும், குடும்பத்தலைவியாக இருந்தாலும் சரி தினமும் உடலுக்கு வேலை தரும் அளவிற்கு குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்வது அவசியம். அது, நடைப்பயிற்சி ஆகவும் இருக்கலாம் அல்லது ஜிம்மில் சேர்ந்து நீங்கள் தினசரி பயிற்சி செய்வதாகவும் இருக்கலாம்.

தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது

நீண்ட நேரம் பணியாற்றுவது, இரவு முழுவதும் விழித்திருப்பது, விடிய விடிய பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குத் தான் நம்முடைய சமூகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆரோக்கியமான தூக்கம் என்றால் என்ன என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. சரியானா தூக்கம் இல்லையென்றால், பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயம் உள்ளது. எனவே தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் வரை நன்றாக தூங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மன அழுத்தத்தை குறைக்கவும்

top videos

    உடல் பருமன், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை முதல் நீரிழிவு மற்றும் இதய நோய் வரை கிட்டத்தட்ட பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வெளிப்புற காரணங்களால் உண்டாகும். காரணம் எதுவாக இருந்தாலும், மன அழுத்தத்திற்கு தீர்வு காணுங்கள். யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது நீங்கள் விரும்பும் செயல்களை செய்வதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

    First published:

    Tags: New Year, New Year 2022, New Year Celebration, Newyear resolution