ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அச்சுறுத்தும் புதிய கொரோனா... கோவிட் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

அச்சுறுத்தும் புதிய கொரோனா... கோவிட் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

கோவிட் பூஸ்டர் டோஸ்

கோவிட் பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ் ஒரு பெரிய பக்க விளைவை ஏற்படுத்தாது. இதன் பக்க விளைவுகள் மற்ற தடுப்பூசிகள் ஏற்படுத்தும் வைரல் மற்றும் ஃப்ளூ அறிகுறிகள் போலவே இருக்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீண்டும் சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்டான BF.7 தற்போதைய கோவிட் எழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் குஜராத்தில் BF.7 வேரியன்ட் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

தவிர ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் BF.7 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடும் கோவிட் தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள தடுப்பூசி முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள்.

யாருக்கு அதிக ஆபத்து..?

பிரபல தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் அங்கிதா கூறுகையில், எப்போதுமே முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். அதே நேரம் வயதானவர்கள் அல்லது கொமொர்பிட் கண்டிஷன்ஸ் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கனவே நுரையீரல் நோய் அல்லது சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது நீண்டகாலமாக ஸ்டெராய்டு எடுத்து கொள்பவர்கள் கடும் கோவிட் தொற்றை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருக்கின்றனர் என்றார்.

நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணரான ராகுல் ஷர்மா கூறுகையில், "ஒருவர் தனது அடிப்படை நோயை பொருட்படுத்தாமல் முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும். ஏனெனில் அறிகுறிகளே இல்லாமல் பாதிக்கப்பட்டு தொற்றை பரப்பும் ஒரு கேரியராக ஒருவர் இருக்க முடியும். எனவே எல்லோருமே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கிறார்.

புதிய வேரியன்ட்டின் அச்சுறுத்தல் மற்றும் தற்போது அது சர்வதேச அளவில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்கள் பூஸ்டர் ஷாட்டை எடுத்து கொள்வது அவசியம்" என்கிறார் ஷர்மா. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் அடுத்த அலை வராமல் இருப்பதை உறுதி செய்யலாம் என்றார்.

கிரிட்டிகல் கேர் ஆலோசகரான பிரபல நிபுணர் ஆர்.சின்னதுரை பேசுகையில், தற்போதைய சூழலில் பூஸ்டர் டோஸ்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய தடுப்பூசிகள் கடும் பக்க விளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் தயக்கமின்றி கோவிட் பூஸ்டர் டோஸ்களை எடுக்க அறிவுறுத்துகிறார்.

Also Read : 2019 கொரோனா வைரஸை விட 4.4 மடங்கு வீரியம் கொண்ட BF.7 திரிபு வைரஸ் - புதிய ஆய்வில் தகவல்.

கவனிக்க வேண்டிய கோவிட் பூஸ்டர் பக்க விளைவுகள்..?

மருத்துவர் அங்கிதா இதுபற்றி கூறுகையில், "பூஸ்டர் டோஸ் ஒரு பெரிய பக்க விளைவை ஏற்படுத்தாது. இதன் பக்க விளைவுகள் மற்ற தடுப்பூசிகள் ஏற்படுத்தும் வைரல் மற்றும் ஃப்ளூ அறிகுறிகள் போலவே இருக்கும். இதில் சிவத்தல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளிட்டவை அடங்கும். மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரிக்கும் அபாயம் இல்லை" என குறிப்பிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

முன்பை போலவே தற்போதும் மாஸ்க் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பராமரிப்பது, காய் சுகாதாரம் பேணுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கும். ஒவ்வொருவரும் இதனை மீண்டும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று ஏற்பட்டால் கூட பரவும் அளவு குறையும். பூஸ்டர் டோஸ் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை விட நன்மைகள் மிக அதிகம். எனவே பக்க விளைவுகளுக்கு யோசித்து கொண்டு பூஸ்டர் டோஸ் போட்டு கொள்வதை தவிர்க்க கூடாது என்றும் டாக்டர் ஷர்மா வலியுறுத்தி இருக்கிறார்.

BF.7 ஒமைக்ரான் அறிகுறிகள் :

முந்தைய வேரியன்ட்களை போலவே காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், உடல் வலி மற்றும் தொண்டை எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் பொதுவாகே இருக்கிறது. இத தவிர சிலருக்கு தும்மல், மூக்கு அடைப்பு, நாசியழற்சி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். சுவை மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்டவை அறிகுறிகளாக பதிவாகியுள்ள பாதிப்புகள் மிகவும் கொஞ்சமாக இருக்கிறது என்கிறார் ஷர்மா.

பாதுகாப்பு :

கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது தவறாமல் மாஸ்க் போடுவது, மிகப்பெரிய அளவிலான கூட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, சானிடைஸர் பயன்படுத்துவது, பூஸ்டர் டோஸேஜ் போடாமல் இருந்தால் போட்டு கொள்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக தனிமைப்படுத்தி கொண்டு டெஸ்ட் செய்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துகிறார் ஷர்மா. ஏனென்றால் இந்த புதிய வேரியன்ட் மிகவும் தீவிரமானது மற்றும் இதனால் பாதிக்கப்படும் ஒருவர் 18 பேருக்கு இந்த தொற்றை பரப்ப முடியும். எனவே மாஸ்க் மற்றும் கூட்டமாக் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

First published:

Tags: Covid-19, Covid-19 vaccine, Immunity boost