முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? எச்சரிக்கும் புதிய ஆய்வு..!

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? எச்சரிக்கும் புதிய ஆய்வு..!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

மாதிரிகள் வைரஸால் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் சிகிச்சை பெறும் 11 அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

உலக அளவில் கொரோனா வைரஸானது 203 நாடுகளை தாக்கியுள்ளது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை 47,000-க்கும் மேல் தாண்டியுள்ளது.

இதற்கிடையில் ஆய்வாளர்களும் ஏதாவதொரு புள்ளியில் இதற்கு தீர்வு கண்டுபிடிக்க மாட்டோமா என இரவும் பகலும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தற்போது பரவும் வைரஸ் காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டது என கண்டறிந்துள்ளனர். ஆனால் இதுவரை அப்படி யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே இதை உறுதியாகவும் சொல்ல முடியவில்லை என சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதாவது காற்றில் பரவும் இந்த வைரஸ் மிகச்சிறிய அளவில் தூசி போன்று அதாவது, 5 மைக்ரோமீட்டர் விட்டத்திற்கும் குறைவான அளவில் சிறிய துளி போல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நீர்த்துளி பல மணி நேரம் காற்றில் நீடிக்கும் தன்மைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இதனால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். காற்றின் மூலம் உடலில் நேரடியாக உள்ளிழுக்கப்படும்போது நுரையீரல் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும் என்று University of Nebraska Medical Centre கண்டுபிடித்த இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகள் வைரஸால் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் சிகிச்சை பெறும் 11 அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் 63.2% அறைக்குள்ளும் 66.7% வெளியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் தற்போது வரை காற்றின் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொட்டால் பரவும், இருமல், தும்மல், சளி மூலம் பரவும் என்று சொல்லி வந்த நிலையில் காற்றிலும் பரவும் என்பது அச்சத்தை மட்டுமன்றி எச்சரிக்கையையும் விடுக்கிறது.

பார்க்க : 

First published: