ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பூஸ்டர் டோஸால் 1 வருடத்திற்கு பிறகும் நீடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!

பூஸ்டர் டோஸால் 1 வருடத்திற்கு பிறகும் நீடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!

பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ்

4-ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தேவையில்லை மற்றும் அவசியமில்லை என்பதை இந்த ஆய்வு ஆதரிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பெற்ற சுமார் 350 சுகாதாரப் பணியாளர்களின் நோய் எதிர்ப்பு நிலையை மதிப்பிட, கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியோவாஸ்குலர் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர்கள் நவீனா ஜெ.நந்தினி, கவிதா கே. பிரபுல்ல குமாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தினர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் சுமார் ஒரு வருடத்திற்கு முன் கோவிட்-19 ப்ரிகாஷன் டோஸை (கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ்) எடுத்து கொண்டவர்கள் ஆவர். கோவிஷீல்ட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெற்ற இவர்கள் அனைவருக்கும் நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் (neutralising antibodies) கணிசமாக இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 99.4% பேருக்கு SARS-CoV-2க்கு எதிரான நியூட்ரலைசிங் ஆன்டிபாடிஸ் போதுமான அளவில் இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 19 - 60 வயதுக்கு இடையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார தொழில்நுட்ப வல்லுநர்கள், வார்டு உதவியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட ஜெயதேவா இன்ஸ்டிடியூட்டின் ஊழியர்களும் அடங்குவர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 58% பேர் பெண் ஊழியர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 2022-ல் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ் + இதே தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்டை எடுத்திருந்தனர். எனினும் இதில் 42% பேர் இதற்கு முன் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 350 ஊழியர்களில் கிட்டத்தட்ட 348 பேர் போதுமான நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகளை கொண்டிருந்தனர். இந்த 348 பேரில் 97%-க்கும் அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பாக இன்ஸ்ட்டியூட்டின் இயக்குநர் சி.என்.மஞ்சுநாத் பேசுகையில், நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் இருப்பு, பூஸ்டர் டோஸ் போட்டு கொண்ட சுமார் 12 மாதங்களுக்கு பிறகும் குறையாமல் கணிசமான அளவு தொடர்ந்து இருக்கிறது. இரண்டாவது பூஸ்டர் ஷாட் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டுமா, தடுப்பூசியின் நான்காவது டோஸ் போட்டு கொள்ள வேண்டுமா போன்ற கேள்விகள் பல மருத்துவ நிபுணர்களிடம் பொதுமக்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

Also Read : மூன்று தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருமாம்.. அறிகுறிகள் இதுதான்...!

இந்த நிலையில் 4-ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தேவையில்லை மற்றும் அவசியமில்லை என்பதை எங்களது இந்த ஆய்வு ஆதரிக்கிறது. மேலும் பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் தாமதிக்காமல் உடனே எடுத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசிய மஞ்சுநாத், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கவியலைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். சில நாடுகளில் Omicron - BF.7 மற்றும் XBB - இன் புதிய துணை வம்சாவளிகளுடன் புதிய கோவிட் எழுச்சியின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சுகாதார வளங்கள், மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தயார்நிலையை மதிப்பிடுவது மற்றும் இயக்கவியலைப் புரிந்து கொள்வது அவசியம் என்றார். 12 மாதங்களுக்கு பிறகும் பூஸ்டர் டோஸால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி நீடித்து வருவது உண்மையில் மகிழ்ச்சியானது என்றார்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Vaccination