• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் நடக்கும் சுமார் 78% அபார்ஷன்கள்!

இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் நடக்கும் சுமார் 78% அபார்ஷன்கள்!

கோப்பு படம்

கோப்பு படம்

நம் நாட்டில் உள்ள திருத்தப்பட்ட கரு கலைப்பு சட்டம் பெண்களுக்கு போதுமான தேர்வை அளிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

  • Share this:
நாட்டில் கரு கலைப்பு தொடர்ந்து அதிக அளவு களங்கத்தை எதிர்கொள்கிறது. கருவை கலைக்க விரும்பும் பெண்கள் சட்ட சேவைகளிலிருந்து விலகிச் செல்கிறார்கள். இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் கருக்கலைப்பு சேவைகளுக்காக பொது சுகாதார வசதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 15.6 மில்லியன் கரு கலைப்புகளில் சுமார் 78% அபார்ஷன்கள் மருத்துவ வசதி இல்லாததன் மூலம் நிகழ்கிறது, முக்கியமாக மருத்துவ கரு கலைப்பு மாத்திரைகள் மூலம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்ப கர்ப்ப காலத்தில் மெடிக்கல் அபார்ஷனின் மருத்துவ செயல்திறன் 95 - 98% ஆகும். இந்த முறை சரியாகப் பயன்படுத்தப்படும் போது மருந்துகள் உயர் தரமானதாக இருக்கும். எனினும் மெடிக்கல் அபார்ஷன் செய்தவர்களில் குறைந்தபட்சம் 25% பெண்கள் முழுமையடையாத கரு கலைப்பை சந்திக்க நேரிடலாம் மற்றும் அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.

அதே போல இந்தியாவில் பெரும்பாலான அபார்ஷன்கள் முறையான சுகாதார முறைக்கு வெளியே நடப்பதால், கரு கலைப்பு சமயத்தில் மருந்துகள் தவறாக நிர்வகிக்கபடுவதுஅல்லது மருந்துகள் சமரசம் செய்யப்படுவதன் காரணமாக நோயாளிகள் முழுமையாக செய்யப்படாத கருக்கலைப்பு அல்லது பிற சிக்கல்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read : தினமும் 2 பழங்கள் மற்றும் 3 காய்கறிகள் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழலாம் - ஹார்வர்ட் ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கரு கலைப்புக்கு பிந்தைய சிக்கல்களுக்கான சிகிச்சையின் நிகழ்வு குறித்து பி.எம்.ஜே குளோபல் ஹெல்த் நிறுவனம் புதிதாக வெளியிடப்பட்ட சான்றுகளில், கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 5.2 மில்லியன் பெண்கள் கரு கலைப்பு சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை விகிதமானது15-49 வயதுடைய 1000 பெண்களுக்கு 15.7 என்ற அளவில் இருந்துள்ளது. இது கருக்கலைப்புச் சட்டம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது, மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவ கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படும் கரு கலைப்பு சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் பலருக்கு இந்த முறை எவ்வாறு செயல்படுகிறது, அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்படி செய்வது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால்
அவர்களின் கரு கலைப்பு முயற்சி பிரச்சனையின்றி முடிந்திருக்கும் மேலும் அடுத்தகட்ட சிகிச்சை தேவைப்படாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் திட்டமிடப்படாத கர்ப்பத்தை கலைக்கும் மில்லியன் கணக்கான பெண்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை 2020-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்டம் கொண்டுள்ளது எனவும் கருதப்படுகிறது.

Also Read : மாதவிடாயின்போது உண்டாகும் தலைவலி..! என்ன காரணம்..? எப்படி சரி செய்வது..?

முதலாவதாக MTP சட்டம் (Medical Termination of Pregnancy) மற்றும் இதன் ஒழுங்குமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தற்போது மகப்பேறியல் மகளிர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சுகாதார வசதிகளில் கரு கலைப்பு செய்ய பயிற்சி பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன. எனவே, சட்டரீதியான கருக்கலைப்பு சேவைகளுக்கான வழங்குநர் தளத்தை விரிவாக்குவதை கொள்கை வகுப்பாளர்கள் இந்த நேரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி தேவைகள் கடுமையானவை மற்றும் கருக்கலைப்புக்கான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகளுக்கு இடையே வேறுபடுவதில்லை. எனவே இந்த சூழலில் அதிக எண்ணிக்கையிலான சுகாதார வழங்குநர்களுக்கு எளிமையான பயிற்சி வழங்குவதன் மூலம், அரசு பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்கலாம்.

இது அபார்ஷன் செய்ய விரும்பும் பெண்களுக்கான விருப்பங்களை கணிசமாக அதிகரிப்பதோடு, அபார்ஷன் தொழில்நுட்பத்தின் திறனையும் அதிகரிக்கும். எனினும் கரு கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் நல்ல முறையில் ஆபத்தின்றி இந்த செயல்முறையை முடிக்க, பரிந்துரைக்கப்படும் மையங்கள் நம்பகமான தகவல்களை வழங்குவதையும் உறுதிப்படுத்த, கொள்கைகள் சமூக சுகாதார இடைத்தரகர்களை விரிவாக உள்ளடக்கியிருக்க வேண்டும்.

மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை நிறுத்த விரும்பும் பெண்களை வழிநடத்தவும் வழிகாட்டவும் போதுமான தகவல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அடுத்ததாக பொது சுகாதார அமைப்புகளில் கரு கலைப்பிற்கு பின் ஏற்படும் சிக்கல்களுக்கு சிகிச்சை பெறும் பெண்களின் அனுபவத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அசாம், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட "இந்தியாவில் கருக்கலைப்புக்கு பிந்தைய சிக்கல்களுக்கான சிகிச்சையின் நிகழ்வு"தொடர்பான ஆய்வில் மருத்துவ கருக்கலைப்பு (medical abortion ) தவிர வேறு முறைகளை பயன்படுத்தியதன் விளைவாக நீடித்த அல்லது அசாதாரண ரத்த போக்கு மற்றும் முழுமையற்ற கருக்கலைப்பு ஆகியவை கரு கலைப்பு மேற்கொண்ட பெண்களுக்கு ஏற்பட்ட பொதுவான சிக்கல்களாக இருந்தன.

மேலும் ஆய்வின் போது கரு கலைப்புக்குப் பிந்தைய கவனிப்பை பெறும் அனைத்து பெண்களின் மாறுபட்ட ஆனால் அதே சமயம் அதிகளவிலான மருத்துவ கரு கலைப்பு இன்றி, முழுமையற்ற கரு கலைப்புடன் அனுமதிக்கப்பட்டதாக பதிலளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலே நாம் சொன்னது போல முழுமையாக செய்யப்படாத கருக்கலைப்பு அல்லது பிற சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் கூட, மெடிக்கல் அபார்ஷன் செய்ய நினைக்கும் பெண்களின் அனுபவத்தை மேம்படுத்த, குறிப்பாக சுகாதார வசதிகளுக்கு வெளியே அபார்ஷன் பயன்படுத்த விரும்பும் பெண்களுக்கு துல்லியமான தகவல்கள் மற்றும் நல்ல தரமான மெடிக்கல் அபார்ஷன் பொருட்களை கிடைக்க செய்ய வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை இது சுட்டி காட்டுகிறது. மெடிக்கல் அபார்ஷன் என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தொழில்நுட்பம்,

இது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு செய்வதற்கான அணுகலைத் திறப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து அபார்ஷன் செய்ய தொலைதூரம் செல்லும் நிலையில் உள்ள பெண்களுக்கு கரு கலைப்பு மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் மற்றும் இந்த மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: