ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

UTI பிரச்சனைக்கு மருந்து கண்டுபிடிப்பு : ஆய்வாளர்கள் தகவல்..!

UTI பிரச்சனைக்கு மருந்து கண்டுபிடிப்பு : ஆய்வாளர்கள் தகவல்..!

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிக்கலான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான பைலோனெப்ரிடிஸ் (AP) ஆகிய இரண்டிற்கும் சிகிச்சையளிக்கக்கூடிய புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கலான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான பைலோனெப்ரிடிஸ் (AP) ஆகிய இரண்டிற்கும் சிகிச்சையளிக்கக்கூடிய புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீர் பாதையில் வரும் நோய்களில் முதன்மையாகக் கருதப்படுவது சிறுநீர் பாதை நோய்த் தொற்று. நோய்க்கிருமிகளாலும், நுண்ணுயிர்களாலும் ஏற்படக்கூடிய இது, சிறுநீர் பாதையின் எந்த பகுதியையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பெண்களை பாதிக்கக்கூடிய இந்த நோய்க்கு சிறப்பாக பலனளிக்கக்கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA)-யில் வெளியாகியுள்ள முடிவுகளில், ALLIUM என்ற ஆய்வின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் படி ஆராய்ச்சியாளர்கள், சிக்கலான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான பைலோனெப்ரிடிஸ் (AP) ஆகிய இரண்டிற்கும் cefepime மற்றும் enmetazobactam மருந்துகளின் கலவை சிகிச்சையளிக்கக்கூடியதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

சிறுநீரக அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று ஆண்டிபயாடிக் சிகிச்சை தோல்வியடையும் போது, காய்ச்சல், செப்சிஸ், சிறுநீர் அடைப்பு அல்லது வடிகுழாய்கள் உள்ளிட்ட ஆபத்து காரணிகளுடன் தொடர்புடைய சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உருவாவதாக கருதப்படுகிறது. இதற்கு நிலையான சிகிச்சையை விட, பைபராசிலின் மற்றும் டசோபாக்டாம் ஆகியவற்றை கொண்ட வழக்கமான சிகிச்சையை விட, புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஆண்டிபயாடிக் சிகிச்சையானது பல மடங்கு பலனளிக்கக்கூடியது என அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவரும், ரட்ஜர்ஸ் ராபர்ட் வூட் ஜான்சன் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பேராசிரியருமான கீத் கேய் தெரிவித்துள்ளார்.

Also Read: சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?

 இந்த மருந்து கலவையானது பாக்டீரியாவின் நொதிகளால் உருவாகும் ஸ்பெக்ட்ரம் பீட்டா-லாக்டேமஸ் (ESBL) தொற்றுகள் எனப்படும் அடிக்கடி ஏற்படக்கூடிய ஆபத்தான பாக்டீரியா தொற்றை எதிர்த்து போராடக்கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் பென்சிலின்கள் மற்றும் செஃபாலோஸ்போரின்கள் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ESBL-உற்பத்தி செய்யும் பாக்டீரியாவை திறம்பட கொல்ல முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

சிறுநீர் பாதை நோய்தொற்றுக்கான புதிய பாக்டீரியாக்களை கண்டறிவது தொடர்பான ஆய்வு, செப்டம்பர் 2018 முதல் நவம்பர் 2019 வரை ஐரோப்பா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 90 மையங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றுள்ளனர். செஃபிபைம் மற்றும் என்மெட்டாசோபாக்டாம் ஆகியவற்றின் புதிய கலவை செலுத்தப்பட்ட 79 சதவீதம் நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர். 58.9 சதவீதம் பேர் பைபராசிலின் மற்றும் டாசோபாக்டாமின் கலவையைக் கொண்டு வழக்கமான சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.

ESBL (ஸ்பெக்ட்ரம் பீட்டா-லாக்டேமஸ்) நோய்த்தொற்று உள்ளவர்களின் துணைக்குழுவைச் சேர்ந்த, 73 சதவிகித நோயாளிகள் செஃபெபைம் மற்றும் என்மெட்டாசோபாக்டம் ஆகியவற்றின் புதிய கலவை மூலமாகவும், 51 சதவிதத்தினருக்கு பைபராசிலின் மற்றும் டாசோபாக்டாமின் கலவையைக் கொண்ட வழக்கமான சிகிச்சையும் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: சிறுநீர் சொட்டு சொட்டாக எரிச்சலுடன் வருகிறதா..? நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

செஃபெபைம் என்பது நான்காவது தலைமுறை செபலோஸ்போரின் ஆகும், இது 1990 களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது மற்றும் பொதுவாகக் கிடைக்கிறது. என்மெட்டாசோபாக்டாம், பிரெஞ்சு உயிரி மருந்து நிறுவனமான அலெக்ரா தெரபியூட்டிக்ஸ் தயாரித்த ஒரு சோதனை மருந்தாகும். இது ESBL-உற்பத்தி செய்யும் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நொதிகளின் வகைகள் உட்பட பீட்டா-லாக்டேமஸ்களை தாக்குகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) மருந்து சேர்க்கைக்கு தகுதிவாய்ந்த தொற்று நோய் தயாரிப்பு மற்றும் ஃபாஸ்ட் டிராக் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Kidney Disease, Medicine, Urinary Tract Infection