புற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..!

CDK4/6 தடுப்பான் மருந்தை கண்டறிந்துள்ளனர். இது செல்களின் இரட்டிப்பை தடுக்கும் என்று மருத்துவச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

news18
Updated: September 17, 2019, 5:30 PM IST
புற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..!
புற்றுநோய் தலை முடி உதிர்தல்
news18
Updated: September 17, 2019, 5:30 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழுவாகச் சேர்ந்து புதிய சிகிச்சையைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இருந்துள்ளனர்.

கீமோதெரபி சிகிச்சை விரைவாக வளரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடியது. புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டிருக்கும்போது கொடுக்கப்படும் கீமோதெரப்பி தலைமுடி வளர்ச்சியை நிரந்தராமாக தடுக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிக அளவிலான மனஅழுத்ததை உண்டாக்கும். அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்கள் முடிகளை தானம் செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பு பலருக்கும் பலன் தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


EMBO Molecular Medicine இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் புற்றுநோய் சிகிச்சைக்காக உட்கொள்ளும் மருந்துகளாலும், கீமோதெரபியாலும் உருவாகும் டாக்சேன்கள் தலைமுடி வேர்களை முற்றிலுமாக பாதிக்கின்றன. இதனால் முடி வளர்ச்சி நிரந்தரமாக தடைபடுகிறது.

இதற்கு சிறந்த தீர்வாக CDK4/6 தடுப்பான் மருந்தை கண்டறிந்துள்ளனர். இதுசெல்களின் இரட்டிப்பைத் தடுக்கும் என்று மருத்துவச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது புற்றுநோயாளிகளுக்கானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.Loading...

இந்த மருந்து எதிர்வினையாற்றுமோ என்று முதலில் யூகித்துள்ளனர். இருப்பினும் கீமோதெரபி கொடுக்கும்போதே இந்த  CDK4/6 தடுப்பானையும் சேர்த்து அளிப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. தற்காலிகமாக, CDK4/6 தடுப்பானை பயன்படுத்துவதால், டாக்சேன்களால் வேர்களில் நச்சு விளைவுகளை ஊக்குவிக்கும் செல்களின் வளர்சியைத் தடுக்கும்.

டாக்சேன்கள், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கிய சிகிச்சையாகும். அதி நச்சுக்கொல்லியாக செயல்படுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய் , நுரையீரல் புற்றுநோய் கொண்டவர்களுக்கு இது அதிகமாக தரப்படுகிறது.

குறிப்பாக, மார்பகப் புற்றுநோய்க் கொண்டவர்களுக்கு தலைமுடி  நிரந்தரமாக வளர்வதைத் டாக்சேன்கள் தடுக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்சியில் டாக்சேன் கீமோதெரபி எவ்வாறு தலைமுடியை பாதிக்கின்றன என்பதை அறிந்துள்ளனர். அதில் தலைமுடி வளர்ச்சிக்கு உதவக் கூடிய வேர்களின் அடியில் உருவாகும் செல்களையும் இந்த டாக்சேன்கள் கடுமையாக தாக்கி அழிப்பதே முக்கிய காரணமாக தெரிய வந்துள்ளது.

இந்த செல்களின் அழிவைத் தடுத்து பாதுகாத்தாலே தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர். அதற்கு CDK4/6 தடுப்பான் சிறந்த சிகிச்சையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பார்க்க :

ஏசி பயன்படுத்தும் போது வரும் ஆபத்துகளில் இருந்து தப்புவது எப்படி? இதோ விவரம்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...