இரத்தப் பரிசோதனையை வைத்து புற்றுநோய் வகையைக் கண்டறியமுடியும் - ஆய்வு

இந்த சோதனை முடிவில் 99.4 சதவீதம் சரியாகவும், 0.6 சதவீதம் மட்டுமே தவறாக பாசிடிவ் எனக் குறிப்பிட்டுள்ளது.

இரத்தப் பரிசோதனையை வைத்து புற்றுநோய் வகையைக் கண்டறியமுடியும் - ஆய்வு
மாதிரி படம்
  • Share this:
சமீபத்தில் நடத்திய ஆய்வில் இரத்தப் பரிசோதனையின் மூலம் அனைத்து வகையான புற்றுநோய் வளர்ச்சியையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 3,600 இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் தனக்கு புற்றுநோய் இருப்பதே தெரியாதவர்கள். அவர்களின் இரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதை சரியாகக் காட்டியுள்ளது. அதுவரை தெரியாதவர்களின் இரத்ததில் புற்றுநோய் அறிகுறிக்கான திசுக்களைக் கண்டறிந்துள்ளனர்.

ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு உதவும் கேரட்


அதேபோல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் போது பாசிடிவ் என குறிப்பிடும். அதேபோல் எந்த உறுப்பில் திசுக்கள் வளர்கின்றன என்ற திறனும் கண்டறிய முடியும் என்பதே இந்த ஆய்வின் தனிச்சிறப்பு.அப்படி அந்த இரத்த பரிசோதனையில் 2,053 மாதிரிகளில் மார்பகங்கள், பெருங்குடல் , கழுத்து, பித்தப்பை, இரைப்பை, தலை, நுரையீரல் , கருப்பை, கணையம் என 20க்கும் மேறொஅட்ட வகையான புற்றுநோய்களைக் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல் இந்த சோதனை முடிவில் 99.4 சதவீதம் சரியாகவும், 0.6 சதவீதம் மட்டுமே தவறாக பாசிடிவ் எனக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இரத்த சோதனையின் மூலம் 1 முதல் 4 நிலைகள் வரைக் கடந்துள்ள புற்றுநோய்களையும் கண்டறிந்துள்ளனர்.

 

 
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading