• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருகலைப்பு விதிகளில் சிறப்பு பிரிவு பெண்களுக்காக அதிரடி மாற்றங்கள்: புதிய கருகலைப்பு விதிகள் என்ன சொல்கிறது!

கருகலைப்பு விதிகளில் சிறப்பு பிரிவு பெண்களுக்காக அதிரடி மாற்றங்கள்: புதிய கருகலைப்பு விதிகள் என்ன சொல்கிறது!

கருகலைப்பு விதிகள்

கருகலைப்பு விதிகள்

கருவில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சி அடிப்படையிலான பாதிப்பு, கருவில் இருக்கும் குழந்தைக்கு மாற்றுத்திறனாளியாக பிறக்கும் ஆபத்து இருந்தாலோ புதிய விதிகளின் அடிப்படையில் கருகலைப்பு மேற்கொள்ளலாம்.

  • Share this:
    கர்ப்பம் தரித்தவர்கள், கருகலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய கருகலைப்பு விதிகளின் படி, கர்ப்பமாக இருக்கும் குறிப்பிட்ட பெண்கள் 20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை கருகலைப்பு செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

    புதிய கருகலைப்பு திருத்த சட்டம் மசோதா 2021 கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, மேற்கூறிய நீட்டிப்பு சிறப்பு பிரிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள், கருத்தரிப்புக்கு பின்னர் விவாகரத்தானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள் உள்ளிட்ட பெண்களுக்குப் பொருந்தும்.

    மாற்றியமைக்கப்பட்ட புதிய விதிகளின் படி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மாற்றுத்திறனாளி கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்டால், அவர்கள் கருகலைப்பு மேற்கொள்ள அரசு அனுமதிக்கிறது. அதே போல பேரிடர் காலங்களில், அவசர காலத்திலும், மனித நேய அடிப்படையில் கருகலைப்பு மேற்கொள்ளவும் அரசு அனுமதிக்கிறது.

    கூடுதலாக, பின்வரும் சந்தர்ப்பங்களில் கருகலைப்பு செய்வதற்கு அரசு அனுமதித்துள்ளது. கருவில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சி அடிப்படையிலான பாதிப்பு, கருவில் இருக்கும் குழந்தைக்கு மாற்றுத்திறனாளியாக பிறக்கும் ஆபத்து இருந்தாலோ அல்லது ஏதேனும் உறுப்பு செயலிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருந்தாலோ, குழந்தை ஆரோக்கியமாக பிறக்கக் கூடிய சாத்தியம் குறைவு என்னும் பட்சத்தில், புதிய விதிகளின் அடிப்படையில் கருகலைப்பு மேற்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே சுவாசப் பிரச்சனைக்கு குட்பை சொல்லலாம்… சூப்பர் டிப்ஸ்!


    கருவில் உள்ள குழந்தை உடல் ரீதியான பாதிப்பு இல்லாமல், மனநலம் பாதிப்பு இல்லாமல், உறுப்புகள் பாதிப்பு அல்லது குறைபாடு இல்லாமல், முழு ஆரோக்கியமாக பிறக்க சாத்தியம் குறைவாக இருக்கும் பட்சத்தில், 24 வாரங்கள் கடந்த பிறகும் கருகலைப்பு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவு செய்வதற்கு இந்த புதிய விதிகளின் அடிப்படையில், மாநில அளவிலான ஒரு மருத்துவக் குழு அமைக்கப்படும்.

    இந்த மருத்துவக்குழுவின் முதன்மையான செயல்பாடு, ஒரு பெண் கருகலைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று கோரும் போது, கோரிக்கை பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள், அப்பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து, கருகலைப்பு மேற்கொள்ளலாம் என்று ஒப்புதல் அளிப்பது அல்லது கோரிக்கையை மறுப்பது ஆகும்.

    கருகலைப்பு மேற்கொள்ளலாம் என்பதை மருத்துவக் குழு ஒப்புக்கொள்ளும் போது, அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, கோரிக்கை பெறப்பட்ட ஐந்து நாட்களுக்குள், குறிப்பிட்ட பெண்ணுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    PFI, பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பூனம் மட்ரேஜா, இந்த புதிய மசோதாவை வரவேற்பதாகக் கூறினார். மேலும், தொழில்நுட்பமும், மருத்துவமும் அறிவியலும் பெரிய அளவில் முன்னேறியிருக்கும் இந்த காலத்தில், இந்த 24 வார கருகலைப்பு, சிறப்பு பிரிவு பெண்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

    புதுதில்லியைச் சேர்ந்த சீனியர் மகப்பேறு மருத்துவரான மருத்துவர் லவ்லீனா நாதிர், அரசின் இந்த புதிய சட்ட மசோதாவை பாராட்டியுள்ளார். மேலும், இந்த பாதுகாப்பான முறையில் கருகலைப்பு மேற்கொள்வது, அனைத்து பெண்களுக்கும் உரியதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் முன்பு, கருத்தரித்த 12 வாரங்களுக்குள் கருகலைப்பு மேற்கொள்ள முடிவு செய்தால், அதை ஒரு மருத்துவர் மட்டும் அங்கீகரித்தால் போதும். மேலும், 12 வாரங்கள் முதல் 20 வரை கருகலைப்பு மேற்கொள்ள, இரண்டு மருத்துவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: