புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டால் விரைவில் குணமடையலாம்: ஆய்வு

புகைப்பிடித்தல்

புகைபிடிப்பதை விட்டு விடுவது நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிப்பதற்கான திறனை மேம்படுத்துவதோடு நில்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • Share this:
ஒருவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின் குறிப்பிட்ட நபர் புகைபழக்கத்தை முற்றிலும் நிறுத்தி விட்டால், புற்றுநோய் சிகிச்சையின் போது நோயானது விரைவில் குணமடைவதாகவும் மேலும் சிகிச்சையின் போது ஏற்படும் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும் என்றும் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர புற்றுநோய் கட்டிகள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. மேலும் புதிய ஆராய்ச்சி முடிவுகளின் படி, நுரையீரல் புற்று நோய் கண்டறியப்பட்ட பின்னரும் தொடர்ந்து புகைபிடிக்கும் நோயாளிகளுடன் ஒப்பிடும் போது, புகைபிடிப்பதை நிறுத்திய நுரையீரல் புற்றுநோயாளிகள் சுமார் 2 ஆண்டுகள் கூடுதல் வாழ்நாளை பெற்றது தெரிய வந்திருக்கிறது.

இது ஒரு பெரிய விளைவு (huge effect) என உலக சுகாதார நிறுவனங்களின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர் மஹ்தி ஷேக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய டாக்டர் மஹ்தி, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சிகிச்சை எவ்வளவு முக்கியமானதோ அதே போல தான் கைபிடிப்பதைத் தவிர்ப்பதும் என்றார். அமெரிக்காவில் பல புற்றுநோய் மையங்கள் தொலைபேசி ஆலோசனை, நிகோடின் பேச்சஸ் மற்றும் மாத்திரைகள் மூலம் புற்றுநோயாளிகள் புகைபிடிப்பதை நிறுத்துவதை எளிதாக்குகின்றன. ஒரு சில நோயாளிகள் தங்களுக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தவுடன் அந்த அதிர்ச்சி அவர்களுக்கு புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு உந்துதலாகவும் இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் விதமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 20 வயதான பிரஸ்டன் பிரவுனிங் என்ற நபர், புகைப்பழக்கத்தை நான் விட்டு விட எனக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது மிகப்பெரிய கரணம் என குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடையது நுரையீரல் புற்றுநோய் என்பதால் புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் கேன்சர் கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் அவமானம், விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற தன்மையை உணரக்கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுகர் 200-ஐ தாண்டி விட்டதா..? உடனே குறைக்கும் இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை எப்போதும் கையில் வைத்திருங்கள்

புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் அவர்களும் பயனடையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட சுமார் 517 ரஷ்ய நோயாளிகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்தனர். அவர்கள் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறிவிட்டார்களா என்பதை ஆண்டுதோறும் பரிசோதித்து வந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, புகைபிடிப்பதைத் தொடர்ந்தவர்களில் 47% உடன் ஒப்பிடும்போது., புகைபழக்கத்தை விட்டவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் உயிருடன் இருந்தனர்.ஆராய்ச்சியாளர்கள் journal Annals of Internal Medicine இதழில் இது தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு விசிட்டின் போதும் மருத்துவர்கள் தங்கள் நுரையீரல் புற்றுநோயாளிகளை புகைபிடிப்பதை விட்டுவிட ஊக்குவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். நிகோடின் கம் மற்றும் ஒரு நாளைக்கு 2 முறை மாத்திரை எடுத்து கொள்வது உள்ளிட்டவை சிகரெட் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியில் அடி எடுத்து வைக்க உதவுகின்றன. புகைபிடிப்பதை விட்டு விடுவது நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிப்பதற்கான திறனை மேம்படுத்துவதோடு நில்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: